வானகம் வையகம் என்றும் இசைத்திட…

வானகம் வையகம் என்றும் இசைத்திட
என்னிடத்தில் உன்னை எடுத்தேன்

ஏக்கம் எண்ணம் எனக்கு வந்தது
எப்படி வந்தது எனக்கு தெரிந்தது
பிறத்தல் ஒரு சனம்
இறத்தலும் ஒரு சனமே!

இரு வினை பிறப்பு
விட்டுச் செல்பவன் நீ!
எதிர் வினை இறப்பு
எடுத்துக் கொள்பவன் நான்!

மாறும் மாயை உலகத்தில்
சாபத்தை ஒரு வரமாக
வரவேற்று, வசந்தம் வீச
சாதனம் வேண்டும் – அது தியாகமே!

நம்மில் மலர வேண்டும் – அது
தினம் வளர வேண்டும்
மனம் புரிதல் வேண்டும்
புரிதலில் தெளிதல் வேண்டும்
தெளிதலில் நிலைத்தல் வேண்டும்
நிலைத்தலில் நின்றல் வேண்டும்
நின்நிலை இறைநிலை அதுவே கண்டேனே!

செல்வராஜ் ராமன்
18/33, நெல்லுக்கடைத் தெரு
கும்பகோணம் – 612001.
கைபேசி: 9095522841