வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடிஇடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
மின்னலொரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூறலொரு தோரணம்
தூய மழை காரணம்
எட்டுத் திக்கும் காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே
தெருவெங்கும் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
தவளை கூட பாடுமே
தண்ணீரிலே ஆடுமே
அகன்ற வெளி வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை
– பொன். செல்வகணபதி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!