வானத்து சுவரினிலே!

வானத்து சுவரினிலே

வண்ணத்தில் ஓவியம் தான்

வரைந்திடத்தான் ஆசை…

கார்மேகக் கரும்புகைதான்

கண்டபடி பரவியதால் …

வண்ணமெல்லாம் கருமையாச்சு…

வானமும் இன்று அழுக்காச்சு …

கதிரவனின் ஓளியதனை

தடுக்கும் திறன் குறைந்ததாலே

கதிர்வீச்சு அதிகமாச்சு

காலநிலை மாறிப்போச்சு…

கரும்புகையை வானுக்கு தருகின்ற

பூமிக்கு அடைமழை தான் பரிசாச்சு…

ஊர் மூழ்கும் நிலையாச்சு…

இனியாவது திருந்திடுமா இவ்வுலகம்?

என்ற கேள்வி இப்ப எழலாச்சு..

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942