வானவில்லை வளைத்து
வளையல் செஞ்சித் தரவா
மருதாணிக்குப் பதிலா
நட்சத்திரம் அரைத்துத் தரவா
பாவாடைத் தாவணிக்கு
அந்தி வானத்தை
அள்ளித் தரவா
கொஞ்சம் கிள்ளி விடவா
குட்டித் தேவதையே
மெட்டிப் போடவா
கைப் பிடித்து
கண்களுக்குள் அடைக்கவா
குளிரும் நிலவே
குடைப் பிடிக்கவா
இதயத் திருடனெனை
கைதியென ஆக்கவா
தண்டனையாய்த் தாலி
கட்டச் சொல்லிடு
உறுதிப்படுத்த கொஞ்சம்
நெத்தியில் இடம் கொடு
மகாராணி உனை
மனதால் ஆண்டிட
மந்திரம் போடடி
தந்திரமில்லாமல் தாயாகடி
கவிஞர் விசித்திரக்கவி
கைபேசி: 9080231403