வார்த்தைகள் இலவசம் என்பதால்தான்
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை
கூடிக்கொண்டே போகிறது
இலவசமாய் பெற்றதால் தானோ
எவரிடமும் எடுத்து வீசிவிடுகிறோம்
ஏளனமாய்
மனதை வதம் செய்வதும் வார்த்தை தான்
மனதை பதம் செய்வதும் வார்த்தை தான்
வார்த்தையும் காற்றைப் போலத்தான்
புயலாய் வீசினால் மனம் புண்பட்டுவிடுகிறது
தென்றலாய் வீசினால் மனம் பண்பட்டுவிடுகிறது
வாசிப்பின் பொருளை மட்டுமல்ல
வாழ்வின் பொருளையும் அடியோடு
மாற்றும் வலிமிகு ஆயுதம் வார்த்தை
வாயிற் கதவைப் போன்றுதான் வாயும்…
பயனுள்ள வகையில் பயன்படுத்தும்போது
திறந்திருக்கட்டும்
பாதுகாப்பாய் இருக்கும் தருணத்தில்
பூட்டியே இருக்கட்டும்
வாயிலைப் பூட்டினால்
பணக்களவில் பயமில்லை
வாயைப் பூட்டினால்
மனப்பிளவில் பயமில்லை
வாழ்வின் பயணத்தை தான்
எவராலும் கணிக்க இயலாது
வாழும் காலத்தில் வார்த்தையின்
பயணத்தையாவது கணிப்போம்
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
6374836353
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!