வாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு

வாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

வாழிடத்தைப் பொறுத்து விலங்குகள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

அவை

1. நிலவாழ் விலங்குகள்

2. நீர்வாழ்விலங்குகள்

3. இருவாழ்விகள்

4. மரங்களில் உள்ள விலங்குள்

5. வானத்தில் பறப்பவை ஆகியவை ஆகும்.

நிலவாழ் விலங்குகள்

நிலத்தில் வாழும் விலங்குகள் நிலவாழ் விலங்குகள் ஆகும். அவை நிலத்தில் வாழுவதற்கு ஏற்ற தகவமைப்புகளைக் கொண்டுள்ளன. அவை

1. நிலவாழ் விலங்குகள் நுரையீல்களைப் பெற்று அவற்றின் மூலம் சுவாசிக்கின்றன. நுரையீரல்கள் இவ்வகை விலங்குகளுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜனைப் பெற உதவுகின்றன.

2. இவ்வகை விலங்குகள் நன்கு கேட்கும் மற்றும் முகரும் உணவுர்வுகளைப் பெற்றுள்ளன.

3. அவை வலிமையான கால்களைக் கொண்டுள்ளன. இவை இரையைப் பிடிக்கவும், தப்பித்து உயிர் வாழவும் உதவுகின்றன.

வெவ்வேறு வகையான நிலவாழிடங்களில் வெவ்வேறான காலநிலைகள் நிலவுகின்றன.

 

உதாரணமாக பாலைவனத்தில் பகலில் அதிக வெப்பமும் இரவில் அதிக குளிரும் நிலவும்.

அங்கு உணவும், நீரும் போதுமான அளவு கிடைப்பதில்லை.

இங்கு நிலவும் அதிக வெப்பம் மற்றும் குளிரைத் தாங்கும் பொருட்டு இங்குள்ள விலங்குகள் தடிமனான மற்றும் குறைவான முடிகளைக் கொண்ட மேல்தோலினைக் கொண்டுள்ளன.

பாலைவன மணலில் புதைந்து விடாமல் இருக்க ஒட்டகத்தின் பாதங்கள் தட்டையாகவும் பெரிதாகவும் இருக்கின்றன. மேலும் இதன் பாதங்கள் அடர்த்தியான தோல் திண்டுடன் காணப்படுவதால், பாலைவன சுடுமணலில் இருந்து பாதுகாக்கப்படுகின்றன.

 

ஒட்டகம்
ஒட்டகம்

 

இங்குள்ள பகல் நேர வெப்பத்தைத் தவிர்க்க பாம்புகள், ஓணான்கள், கங்காரு எலிகள் போன்றவை விடியல் மற்றும் அந்திப் பொழுதில் சுறுசுறுப்பாக இயங்குகின்றன.

 

கங்காரு எலிகங்காரு எலி

 

சிலவிலங்குகள் இரவுப் பொழுதில் மட்டும் இயங்குகின்றன. இங்கு காணப்படும் ஒட்டகம், உணவு மற்றும் நீர் இல்லாமல் பலநாட்கள் உயிர் வாழும்.

 

துருவப்பகுதிகள் ஆண்டு முழுவதும் பனிக்கட்டிகளால் போர்த்தப்பட்டிருக்கின்றன. இங்கு மிகவும் குறைவனான உணவுகளே கிடைக்கின்றன.

இங்குள்ள துருவக்கரடிகள் கடினமான குளிரைத் தாங்கும் பொருட்டு அடர்த்தியான ரோமங்கள் கொண்ட தோலினைக் கொண்டுள்ளன.

இத்தோலானது பனிக்கட்டியிலிருந்தும், குளிரிலிருந்தும் துருவக்கரடிகளைப் பாதுகாக்கின்றது.

 

துருவக்கரடி
துருவக்கரடி

 

துருவக்கரடிகள் பனிகட்டிகளில் விழுந்துவிடாமல் இருக்க இதனுடைய பாதங்கள் அடர்த்தியான முடிகள் மற்றும் புடைப்புகளுடன் காணப்படுகிறது.

இங்குள்ள பென்குயின்கள், வால்ரஸ்கள், சீல்கள் போன்றவை தோலுக்கு அடியில் அடர்த்தியான கொழுப்பு அடுக்கினைக் கொண்டுள்ளன.

இக்கொழுப்பானது குளிர்ந்த நீரால் இவ்விலங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதோடு உணவு குறைந்த குளிர்காலங்களில் இவை சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுகின்றன.

 

வால்ரஸ்கள் கூட்டம்
வால்ரஸ்கள் கூட்டம்

 

இவைகள் தங்களை சூடாக வைத்திருப்பதற்காக கூட்டமாக சேர்ந்தே காணப்படுகின்றன.

நீர்வாழ் விலங்குகள்

நீரில் வாழும் விலங்குகள் நீர்வாழ் விலங்குகள் ஆகும். மீன்கள், திமிங்கலம், டால்பின், ஆக்டோபஸ் மற்றும் நண்டுகள் ஆகியவை நீர்வாழ் விலங்குகள் ஆகும்.

 

டால்பின்
டால்பின்

 

நீர்வாழ் விலங்குகள் பெரும்பாலும் செவ்வுள்களால் சுவாசிக்கின்றன. இச்செவ்வுள்கள் நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜனை உட்கவர உதவுகின்றன.

மீன்கள் செதில்கள் மூலமாகவும், வாத்துக்கள் வலைப்பின்னல் பாதத்தைக் கொண்டும், ஆமைகள் துடுப்புகள் போன்ற பாதத்தாலும் நீரில் நீந்துகின்றன.

 

நீந்தும் மீன்
நீந்தும் மீன்

 

நீந்தும் வாத்து
நீந்தும் வாத்து

இருவாழ்விகள்

நீரிலும், நிலத்திலும் வாழ்பவை இருவாழ்விகள் எனப்படுகின்றன. தவளைகள், ஆமைகள், சாலமன்டர்கள் ஆகியவை இருவாழ்விகள் ஆகும்.

இருவாழ்விகள் நீரில் இருக்கும்போது ஈரப்பதமான தோலின் மூலம் நீரில் கரைந்துள்ள ஆக்ஸினை எடுத்து சுவாசிக்கின்றன. நிலப்பரப்பில் அவை நுரையீரல்கள் மூலம் சுவாசிக்கின்றன.

 

நீந்தும் தவளை

 

நீந்தும் தவளைதவளைகள் கால்களை துடுப்புகளாகப் பயன்படுத்துகின்றன. தரையில் இவை நீளமான வலிமையான பின்னங்கால்களைக் கொண்டு தாவிக் குதித்து நகருகின்றன.

மரங்களில் உள்ள விலங்குகள்

நிலத்தில் வாழும் விலங்குகளில் பெரும்பான்மையான விலங்குகள் மரங்களில் தங்களின் நேரத்தைச் செலவழிக்கின்றன. அவை மரங்களில் உள்ள விலங்குகள் எனப்படுகின்றன.

குரங்குகள், ஒராங்குட்டான், கோவாலாக் கரடிகள் போன்றவை மரங்களில் வாழும் விலங்குகளுக்கு உதாரணங்களாகும்.

 

கோவாலா கரடி
கோவாலா கரடி

மரங்களில் ஏறிஇறங்குவதற்கு ஏதுவாக இவ்விலங்குகளின் மூட்டுகள் மற்றும் தசைகள் வலுவானவைகளாக உள்ளன. தங்களின் வலுவான நகங்களின் மூலம் இவ்வகை விலங்குகள் மரக்கிளைகளை உறுதியாக பிடித்துக் கொள்கின்றன.

 

ஒராங்குட்டான்
ஒராங்குட்டான்

 

சிலவகைக் குரங்குகள் நீளமான வால்களைக் கொண்டுள்ளன. இவ்வகை வால்களைக் கொண்டு மரத்தில் இருந்து மரத்திற்கு தாவுகின்றன. உரங்குட்டான் குரங்குகள் நீளமான கைகளைக் கொண்டுள்ளன.

வானத்தில் பறப்பவை

தங்களின் பெரும்பாலான நேரத்தை வானத்தில் கழிக்கும் விலங்குகள் வானத்தில் பறப்பவை என்றழைக்கப்படுகின்றன.

 

வானத்தில் பறப்பவை
வானத்தில் பறப்பவை

 

பறவைகள், பூச்சியினங்கள் இவ்வகையைச் சார்ந்தவை. பறவைகளில் முன்னங்கால்களே இறக்கைகளாக உருமாறியுள்ளன. இவைகள் வானத்தில் பறக்க உதவுகின்றன.

பறவைகள் வெற்று எலும்புகளையும், குறைந்த உடல் எடையும் கொண்டுள்ளதால் வானில் எளிதாக பறக்கின்றன.

வெளவ்வால்கள் வானில் பறப்பவை எனினும் இவைகளின் இறக்கைகளில் சிறகுகள் காணப்படுவதில்லை.

 

வெளவ்வால்
வெளவ்வால்

 

இவைகளின் இறகுகள் மெல்லிய தோலினால் ஆனவை ஆகும். இந்தத் தோலானது கைகால்கள் மற்றும் விரல்கள் முழுவதும் பரவியுள்ளது.

 

பூச்சிகளின் இறக்கைகள் கைககால்களின் மாற்றமல்ல. மாறாக அவை உடலில் தனித்துவமான கட்டமைப்புகளாக வளர்கின்றன.

 

வண்ணத்துப்பூச்சி
வண்ணத்துப்பூச்சி

 

பறவைகள் ஆகாய விமானத்தைப் போன்ற உடலமைப்பைக் கொண்டுள்ளதால் அவை காற்றைக் கிழித்து எளிதாகப் பறக்கின்றன.

 

ஆகாயவிமானம் போல் பறக்கும் பறவை
ஆகாயவிமானம் போல் பறக்கும் பறவை

 

வாழிடத்தைப் பொறுத்து விலங்குகளின் வகைபாடு பற்றி அறிந்து கொண்டீர்கள்தானே?

வ.முனீஸ்வரன்

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.