தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு : 100 கிராம்
கடலைப் பருப்பு : 100 கிராம்
வாழைப்பூ : 1
வெங்காயம் : 1
தேங்காய்ப் பூ : 1 மூடி (துருவியது)
காய்ந்த மிளகாய் : 7
உப்பு : தேவையான அளவு
மஞ்சள் தூள் : 1 சிட்டிகை
சோம்பு : 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் : 1 டேபிள் ஸ்பூன்
பொரிக்க தேவையான எண்ணெய்
செய்முறை
பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வாழைப்பூவைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கிரைண்டரில் ஊறிய பருப்பு, மிளகாய், சோம்பு, சீரகம், உப்பு போட்டு நறநறவென்று அரைத்து கடைசியாக வாழைப்பூவை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய்த் துருவல், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி வடையாகப் பொரித்து எடுக்கவும். சுவையான வாழைப்பூ வடை ரெடி.