நிபந்தனை வைத்து நிந்தனை செய்தாலும்
நிந்தனை செய்து நிபந்தனை வைத்தாலும்
நிலைகுலைய வைக்கும் நிர்பந்தம் வந்தாலும்
நிலையறிந்து நிதான மிழக்காமல் நினைவில் கொள்
நிறை குறை யாவும் மாறும் இந்நிலை யாவும் மாறும்
அனைத்தும் அறிந்தோர் இல்லை
ஆண்டவன் அவனுமில்லை
இவன் இச்சைக்கு இணங்குவோர் இல்லை
ஈசன் அரசன் எவன் இணங்கினாலும் அன்பிற்கு அழிவில்லை
உற்றார் உறவினர் வேண்டாம்- உன்
ஊக்கம் ஒன்றே போதும்
எதுவான போதிலும்
ஏக்கம் வேண்டாம்
ஐ வகை குணங்களை அடக்கி ஆள்
ஒன்றும் இல்லை இழக்க
ஓங்கு ஒருவனும் இல்லை எதிர்க்க
ஔடதம் குறைத்து பெற்றிடுவாய் நல்வாழ்வு
அஃதுவே வாழ்க்கை….

அ.சதிஷ்ணா
உதவி பேராசிரியர்
அருணை மருந்தியல் கல்லூரி
திருவண்ணாமலை
கைபேசி: 8438574188