வாழ்க்கையில் வெற்றி காண ஏதாவது ஒன்றைப் பற்றியே சிந்தனை செய். அந்த சிந்தனையே உன்னுடைய வாழ்க்கையாகட்டும். குறிப்பிட்ட அந்த சிந்தனை பற்றியே யோசனை செய், கனவு காண். மூளை, தசை, நரம்பு என்று உன் உடம்பின் ஒவ்வொரு உறுப்பிலும் அந்த சிந்தனை மட்டுமே மேலோங்கி இருக்கட்டும். மற்ற சிந்தனைகளுக்கு இடம் அளிக்காதே! இது தான் வாழ்க்கையில் வெற்றி காண வழியாகும்.
உன்னிடம் என்ன குறையிருந்தாலும் அதனைத் திருத்திக்கொள். கவலைகளைக் குழி தோண்டிப் புதை. கடுமையாக உழைக்க உடலையும், மனதையும் பக்குவப்படுத்திக் கொள். நிச்சயமாக மிகவும் குறுகிய காலத்தில் வாழ்க்கையில் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்து சுக வாழ்வு வாழ முடியும். வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.