காதல் திருமணம் செய்து கொண்ட ஒருவனும்,
பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்து கொண்ட ஒருவனும், தங்களின் வாழ்க்கை எவ்வாறு போய்க் கொண்டிருக்கிறது என்று பேசிக் கொள்கின்றனர்.
காதல் மணவாளன்…
மலரும் நினைவுகளுடன்
ஓடிக்கொண்டிருக்கிறது.
நிச்சயிக்கப்பட்ட மணவாளன்…
ஏதாவது இன்ப நினைவுகள்
இருந்தால்தானே மலர்வதற்கு
வாழ்க்கை முழுவதுமே
பொருளைத் தேடி ஓடாதீர்கள்…
இளமை இருக்கும் வரை
வாழ்க்கை இனிக்கும்..
முதுமையில் இளமையில் வாழ்ந்த
வாழ்க்கையை நினைத்தால் இனிக்கும்…
வாழ்க்கையைத் திரும்பிப்
பார்க்கும் பொழுது நாம் ஓடி ஓடி
சேர்த்துவைத்த செல்வங்களை
நினைத்தால் இன்பம் பெருகாது.
மாறாக இதனை சேர்க்க
எத்தனை பாடுபட்டேன் தெரியுமா
என்று விளக்கும்போது கூட
துன்பமே மிஞ்சும்.
பொருள் என்றுமே
வாழ்க்கைக்கு வசந்தம் அளிக்காது.
அன்பு நிறைந்த வாழ்க்கையே
என்றென்றும் வசந்தம் அளிக்கும்.
அதற்காக பொருளைத் தேடாதே
என்று கூறவில்லை.
பொருளை மட்டுமே தேடி
வாழ்க்கையைத் தொலைத்து விடாதே …..
மீண்டும் தேடினாலும் கிடைக்காதது
வாழ்க்கையே…
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!