நிகழ்கால துன்பங்கள் போதும்
இறந்தகால இன்பங்களும் போதும்
எதிர்காலம் பற்றிய கவலை எனக்கில்லை
நிகழ்கால துன்பங்களோடு
இறந்தகால இன்பங்களை எண்ணியபடி
என் எதிர்காலம் நகர்கின்றது
இல்லை இல்லை நகர்த்துகின்றேன்
நிகழ்காலத் துன்பங்கள் மறைய போவதுமில்லை
இறந்தகால இன்பங்கள் மாறப் போவதுமில்லை
பின் எதற்காக எதிர்காலத்தை
கவலையோடு நகர்த்த வேண்டும்
இருந்தால் என்னோடு நகரட்டும்
இல்லையெனில் எப்படியும் நகரட்டும்
என் தன்னம்பிக்கை ஒளிர்கின்றது
வாழ்க்கையின் ஒளிவட்டம் தெரிகின்றது
கவலைகளை சுமக்கவும் விருப்பமில்லை
இன்பங்களை மறக்கவும் விருப்பமில்லை
எதிர்காலம் பற்றிய கவலையும் இல்லை
இருக்கும் இயல்பு நிலையிலிருந்து
அழகான இயற்கையோடு அழகான
வாழ்க்கையை அன்போடு நகர்த்தியே
சென்று வாழ்வதே வாழ்க்கை என்பேன்…
செல்வதை நிறுத்த முடியாது
வருவதை தடுக்க இயலாது
எதற்காக
கொடுப்பதை மறைக்க வேண்டும்
கேட்பதை நிராகரிக்க வேண்டும்
உள்ளத்தில் துணிவு வேண்டும்
ஊக்கத்தில் தெளிவு வேண்டும்
எடுத்த செயல் முடித்தல் வேண்டும்
எதிலும் உண்மை வேண்டும்
தளராத உறவு வேண்டும்
தாங்கிப் பிடிக்க வல்லமை வேண்டும்
தீங்கிழைக்கா செயல் வேண்டும்
தீயோர் நமைக் கண்டு ஓட வேண்டும்
குற்றம் இல்லா அன்பு வேண்டும்
கூறும் வார்த்தையில் இனிமை வேண்டும்
இவற்றுக்கெல்லாம் முதலில் நீ வேண்டும்
ஆம்
நீ வேண்டும்
நிகழ்காலத் துன்பங்கள் மறைய போவதுமில்லை
இறந்தகால இன்பங்கள் மாறப் போவதுமில்லை
பின் எதற்காக எதிர்காலத்தை கவலையோடு நகர்த்த வேண்டும்.
வாருங்கள் என்னோடு
வந்தால்
வாழ்க்கை உங்களோடு
மறுமொழி இடவும்