வாழ்க்கை முறைகள் யாவை?
1. பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.00 மணி முதல் 5.30 மணிக்குள் பாடங்களை படித்தால் அவை நன்கு மனதில் பதியும்.
2. மூன்றாம் பிறைச் சந்திரனைக் காண்பது சிறப்பு.
3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு எப்பொழுது குங்குமம் கொடுத்தாலும் முதல் நீங்கள் நெற்றியில் இட்டு கொண்டு பிறகு வந்தவர்களுக்கு கொடுக்கவும்.
4. பெண்கள் காலையில் முதல் வீட்டுக் கதவை திறக்கும் பொழுது அஷ்டலெட்சுமிகளின் திருநாமத்தை உச்சரித்தபடி திறந்தால் அஷ்டலெட்சுமிகளும் வீட்டிற்குள் நுழைவர்.
5. வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்குவது சிறப்பு. இதனால் சகல செல்வங்களும் சேரும்.
6. வாகனத்தின் மீது அமர்ந்து சாப்பிடக்கூடாது.
7. நகத்தை பல்லினால் கடிப்பவரிடம் மூதேவி ஸ்திரமாக வாசம் செய்கிறாள்.
8. அடிக்கடி கை விரல்களை நெறித்து கொள்பவர்களிடம் கொடூரமும், தரித்திரியமும் வாசம் செய்யும்.
9. துரும்பு, தர்ப்பம், புஷ்பம் இவைகளை நகத்தால் கிள்ளக் கூடாது. பூஜை செய்த பழங்களை நகம்படாமல் உரிக்க வேண்டும். அரைத்த சந்தனத்தை நகத்தால் வைத்தல் கூடாது. பூவை நகத்தை பயன்படுத்தி சுவற்றிலோ அல்லது தரையிலோ வைத்து துண்டிக்கக் கூடாது.
10. நம் ஊர் அல்லது வீட்டிற்குப் பின்புறம் வழியாக வெளியே போகக் கூடாது.
11. தூங்குபவர்களை எழுப்புவது மகா பாவம். இந்திரியங்கள் எல்லாம் மனதில் ஒடுங்கும். எனவே அவசரமாக தூக்கத்தில் எழுந்தால் மனதிலிருந்து கண், காது முதலியவை அந்தந்த இடத்திற்கு போகாமல் கண் சக்தி காதிலும், காது சக்தி மூக்கிலும் புகும். இதனால் குருடு, செவிடு ஆக நேரும்.
12. பிறருடைய ஆடை, செருப்பு, மாலை, எச்சில் பாத்திரம், உட்கார்ந்த பலகை, படுக்கை ஆகியவற்றை உபயோகித்தால் நோயுடன் பாவம் சேரும்.
13. மஞ்சள், நெய், உப்பு, புழுங்கலரிசி, மருந்து, பாக்கு, பால், மோர், வெல்லம் இவைகளுக்கு தோசம் இல்லை.
14. ஹோமப் புகை ஆயுளை வளர்க்கும் ஆனால் கர்ப்பிணி பெண்கள் மீது ஹோமப் புகை படக்கூடாது.
15. அக்னிஹோத்ரம், தமது வயல், வீடு, கோவில், கர்ப்பிணி, வயதானவர், குரு, ராஜா இவர்களிடம் வெறுங்கையுடன் செல்லாமல் அவரவர்களுக்கு உகந்ததை கொண்டு செல்ல வேண்டும். குசேலர் கண்ணனுக்கு அவல் கொடுத்து குபேரரானார்.
இவையே நல்ல வாழ்க்கை முறைகள் ஆகும்.