அந்த
மனம் பிறழ்ந்தவனின் நிழலின்
நிஜமான ஆன்ம லயத்திற்கு முன்
புரண்டு வந்து உருளுகிறது
ஏகாந்தம்…
சுகத்தின் அந்நியத்தில் விளிம்பற்று
ஏக சுழற்சியில்
சுற்றி வருவதாக இருக்கிறது
இரவும் பகலும்…
அந்த மனம் பிறழ்ந்தவனின் போக்கில்
நீங்கள் அபத்தம் சூடுவீராயின்
அது நீங்களாகி விடுவீர்கள்…
நன்றியின்பால் நின்று
வாலின் மூலம் வெளிப்படுத்துவது
அன்பென நம்பி விடாதீர்கள்…
அது தொங்கவிடும் நாவின்
இருமருங்கிலும்
சிவப்பை அப்பி இருக்கின்றன
கூர்மையான பற்கள்…
அந்தக் கொடி
கொழுக்கொம்பைத் தழுவிப் படர்ந்து வருவதாக
மவுனமாக இருந்து விடாதீர்கள்
ரசித்தப்படி…
நீங்கள் உணராத படிக்கு
உங்கள் பின் வெட்டரிவாள் கொண்டபடி
மரம் வெட்டி வருவதை அறியாமல் இருக்கிறீர்கள்…
ரசவாதப் போக்கில்
ரசவாதக் கலவையின் அலையில் மூழ்கி
மயக்கத்தில் இருந்து கொள்ள அது பணித்துவிட்டதால்
பணிந்து விடாதீர்கள் நீங்கள்…
நிஜத்தை ஆராயும் பொருட்டு
நீங்கள் நிலத்துள் புகுந்து
நீளும் வேரை பெயர்த்துக்
கொண்டிருப்பதிலிருந்து
விடுவித்துக் கொள்ளுங்கள்…
ஆழப் புதைந்து விட்ட உங்களுக்கு
தெரியாது மரணிப்பதிலிருந்து பிறந்து விடாது
மரமென்று சொல்வது
உங்களையும் தான்…
அந்த
மனம் பிறழ்ந்தனின் நிகழ்வில்
புறத்தைப் பார்க்கும் உங்கள் முன்
அகத்தைப் பார்க்கும் முரண்பாட்டில்
ஊடாடி
பின்னுவதில் உருவாகும் அநித்தியத்தின்
நித்தியத்தைப் புறக்கணிக்காமல்
தொடர…
இயங்வதிலிருந்து
பிறழ்ந்து விடாமல் ரசவாதியின்
ரசக் கலவையிலிருந்து
மீளமுடியாமல் இருந்து கொண்டிருக்கிறப்பது தான்
வாழ்தலின் இருப்பு…
கா.அமீர்ஜான்
திருநின்றவூர்
பேச: 7904072432
வேர்களை உள்நுழைந்து அசைத்துப் பார்க்கும் மௌன வெளிப்பாடுகள்…
ரசவாதி ரசக்கலவை மாற்றங்களின் உருமாற்றங்கள் தேடல் ஆகுதே!
வலிமையும் சோடனையும் உண்மையாய் என்றும் தொலைத்து விடாது.
சிறப்பான கவிதை; அழகுற கவிஞர் அமைத்துத் தந்திருக்கிறார்.
இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.