வெள்ளாமை வீடு வந்து சேர்ந்துருச்சு
விளைஞ்சதெல்லாம் நெல்மணியா குவிஞ்சிருச்சு
சில்வண்டு சத்தம் கூட கேட்கலாச்சு
செத்த நேரம் ரசிக்க மனம் லயிக்கலாச்சு
அள்ளி வீசும் ஆனிக்காத்து அரவணைச்சு
ஆலமரம் பாடும் பாட்டு கேட்கலாச்சு
முள்ளில்லா அல்லிப்பூவும் பூக்கலாச்சு
முழுநிலவும் வானத்துல நடக்கலாச்சு
புள்ளினங்கள் கொஞ்சி விளையாடலாச்சு
பூமலர்ந்த வாசனையோ மயக்கலாச்சு
நல்லாத்தான் இந்த பூமி இங்கிருக்கு
நம்மை மனதார வாழ்த்திடத்தான் காத்திருக்கு
கைபேசி: 9865802942