உலக அளவில் முதல் 50 வங்கிகளுக்குள் ஒன்றாக உருவெடுத்திருக்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கு வாழ்த்துக்கள்!
வளரும் இந்தியப் பொருளாதாரத்தை உலக அளவில் உயர்த்திப் பிடிக்க பெரிய வங்கிகள் அவசியம் தேவை.
உலகின் முதல் பத்து பெரிய வங்கிகளில் 3 வங்கிகள் சீனாவைச் சார்ந்தவை. எனவே நாமும் பெரிய வங்கிகளை உருவாக்க வேண்டும் என்ற கருத்து உருவாகி வருகின்றது.
நாம் இப்போதுதான் முதல் 50 என்ற இடத்திற்குள் நுழைகின்றோம். ஆனாலும் இது ஒரு முன்னேற்றமே.
பாரத ஸ்டேட் வங்கி அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் ஐதராபாத் ஆகிய துணை வங்கிகளை தன்னுடன் இணைத்ததால் மேலும் பெரிய வங்கியாகியிருக்கின்றது.
இந்த இனிய தருணத்தில் பாரத ஸ்டேட் வங்கி மேலும் சிறப்பாக வளர்ச்சியடைய இனிது வாழ்த்துகிறது.
பெரிய வங்கி என்பது பெரிய பொறுப்பு என்பதை பாரத ஸ்டேட் வங்கி உணர்ந்து மக்களுக்கு சிறப்பாக சேவையளிக்கும் என்று இனிது நம்புகிறது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!