காற்றடித்த திசையில் பறக்கும் சருகல்ல நான்
காட்டாற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் போடும் மீன்
காற்றடித்தால் சாயும் வாழையல்ல
சூறாவளியிலும் சுழன்று நிற்கும் ஆலமரம்
என் பாசமிகு எதிரியே
உன் குருதி கொதித்தாலும்
வீழ்வேனென்று என்று நினைக்காதே
வாழ்ந்தே தீருவேன்!
கவிஞர் -லீ –
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!