வானத்தில் எத்தனையோ
பறவைகள் பறக்கின்றன
ஆனால் அவற்றிற்கான
சுவடுகள் இருப்பதில்லை
கோலத்தில் எத்தனை வண்ணம்
மனித வாழ்க்கையில்
எத்தனை அடையாளச் சின்னம்
எல்லோரும் வரலாற்றில் வரையறுக்கப் படுவதில்லை
வாழ்க்கை வரலாறு ஆவதும்
வரையறையில்லாமல் போவதும்
வாழ்க்கையின் கைகளில் இல்லை
வாழ்பவனின் கைகளில் உள்ளது
வாழ்க்கை ஒரு வட்டம் என நினைத்து
உன்னைக் குறுக்கிக் கொள்ளாதே
அது பரந்துபட்ட பல
கட்டங்களை உள்ளடக்கியது
நம் வாழ்க்கை அதிசயமான ஒற்றைத்தாள்
அதில் அடுத்த பக்கமில்லை
திரும்பிப் பார்ப்பதற்கும்
திரும்ப வாழ்வதற்கும்
இந்த நொடியே உனக்குச் சொந்தம்
இந்த நொடியிலேயே ஆனந்தமாக
வாழ முற்படும்போது
துன்பம் மறைந்து போகிறது
வாழ்க்கை என்பது ஒருமுறை
நீ வாழ்ந்து காட்டு நல்முறை

ப. கலைச்செல்வன்
இளங்கலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு
பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி
திருச்சி-23
கைபேசி: 9385517371
மின்னஞ்சல் : kannankalaiaselvan2001@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!