நம் வாழ்வு செழிக்க கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள் சில இங்கே உள்ளன.
இன்றைக்கு இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் ஆரோக்கியமாக வாழ அவை உதவும்.
சாப்பிடும் முறைகள்
பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள்.
தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள்.
உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்புஉள்ளது.
இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள்.
விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.
பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள்.
பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும்.
உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள்.
டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.
தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள்.
குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.
வாழ்வு செழிக்க
தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல.
ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும்.
அவ்வப்போது மனதுக்குள் சிறிது நேரம் பிரார்த்தனை செய்யுங்கள்.
தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக).
உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடமேஉள்ளது.
மற்றவர்களைப் பற்றிப் புறம்பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
உங்களைப் பற்றி புறம் பேசப்படுவதை பொருட்படுத்தாதீர்கள்.
எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.
குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள்.
காலை 5 மணிக்குமேல்தூங்காதீர்கள்.
டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு நிறைய நல்ல புத்தகங்களைப் படியுங்கள்.
பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுங்கள்.
குழந்தைகளிடம் Smart Phone களை கொடுக்காதீர்கள்.
தேவையற்ற விஷயங்களுக்காக Whats app, Facebook போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் நேரத்தைவீணடிக்காதீர்கள்.
கடுமையாக உழைக்காதீர்கள்.
உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள்.
அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
நீங்கள் விழித்திருக்கும் பொழுது உங்கள் தேவைகளைப் பற்றி நிறைய கனவு காணுங்கள். அதை செயல்படுத்தவும் முயற்சி செய்யுங்கள்.
கடந்த காலத்தை மறந்து விடுங்கள். முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும்.
நிகழ் காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாகவரும்.
உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுத்து விடுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவிசெய்யுங்கள்.
குறுகிய கால இந்த வாழ்க்கையில் யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.
வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லிவிடுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.
வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, SMS மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள். இது உங்களுக்கும் அவர்களுக்கும் மன அமைதியையும், பரஸ்பர அன்பையும்மேம்படுத்தும்.
மன்னிக்கப் பழகுங்கள். தேவையான நேரத்தில் தயங்காமல் மன்னிப்பும் கேளுங்கள். உங்கள் மனபாரம் நீங்கும்.
60 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியம். பணம் முக்கியமல்ல.
அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்களைப் பற்றி நினைப்பது மற்றவர்களின் வேலையல்ல.
உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
உங்களின் நிறைவேறிய தேவைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நிறைவேறாத தேவைக்கு பிரார்த்தனை செய்யுங்கள்.
உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
அவ்வப்போது உங்களிடம் உள்ள நல்லவைகளை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.
உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, அன்பை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை ஒதுக்கி விடுங்கள்.
வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல. கவலைகளும், நோய்களும் கூட. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.
மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், மனச்சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.
நம் வாழ்வு செழிக்க இவற்றைக் கடைப்பிடிப்போம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!