சிறப்புடன் மகிழ்ந்து கொண்டாடு
உறவுடன் இணைந்து களிப்போடு
பிறரையும் வணங்கு பணிவோடு
அறத்தினில் விளங்கு உயர்வோடு
கலக்கமே விலக்குத் தெளிவோடு
அலட்சியம் விடுவாய் இன்றோடு
பலமுடன் வருவாய் உழைப்போடு
பலனது கிடைக்கும் நீ பாரு
இறைவனை தினமும் நினைவோடு
இறைஞ்சியே உருகி தொழுதாடு
குறைகளே நீங்கும் அறவோடு
நிறைவுடன் வாழ்வை சுவையாக்கு
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!