வாழ்வை முன்னேற்றும் கேள்விகள்

உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமென்றால் கீழே வரும் கேள்விகளைப் பார்த்து அதன் பதிலை யோசிக்கவும்.

வாழ்க்கையில் உங்கள் இலக்கு என்ன ?

குறுகிய காலத்தில் எதைச் சாதிக்க வேண்டும், நீண்ட காலத்தில் எதைச் சாதிக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்.

உங்களுடைய விருப்பங்கள் என்ன ? உங்களுடைய வெறுப்புகள் என்ன ?

உங்கள் தகுதி என்ன ?

உங்கள் திறமையும் உங்கள் வேலையும் ஒத்துப் போகின்றதா ?

உங்களுடைய வேலையும் உங்களுடைய இலக்கும் ஒத்துப் போகின்றதா ?

உங்கள் இலக்கிற்கான தடைகள் எவை ?

உங்கள் இலக்கிற்கான வாய்ப்புகள் எவை ?

இந்தக் கேள்விகளையெல்லாம் மீண்டும் ஒருமுறை படித்து உங்களுடைய நேர்மையான பதிலை யோசித்தீர்களானால் உங்களை நீங்களே கண்டுகொள்வீர்கள்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.