வாழ் இனிதாக
நட அதிர்வின்றி
பேசு பணிவாக
உண்ணு அளவாக
சுவாசி ஆழமாக
தூங்கு அமைதியாக
உடுத்து அழகாக
செயல்படு அச்சமின்றி
உழை உண்மையாக
சிந்தி சுயமாக
நம்பு சரியாக
பழகு நாகரிகமாக
திட்டமிடு முன்னதாக
ஈட்டு நேர்மையாக
சேமி சிறிதாவது
செலவிடு யோசித்து
நேசி பேதம் கடந்து
படி முடிவின்றி
மரணி பயமின்றி