வேதனை தீர்க்க வா வா வேலவா
வேறு துணை இல்லை ஐயா மீட்க வா!
தாயும் தந்தை ஆனவனே தாங்க வா
தெய்வம் உந்தன் பாதம் சேர்ந்தோம் தேற்ற வா!
பூவடியை வணங்குகிறோம் பேண வா
பூமி நலம் காத்திடுவாய் பகலவா!
ஆண்டிக் கோலம் பூண்டு நின்றாய் ஆண்டவா
வேண்டு வரம் தந்திடுவாய் ஆள வா!
கண்டுக் கொண்டோம் கண்குளிர மால்மருகா
அண்டமே உந்தன் காலடியில் காக்க வா… கந்தனே வா…
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com