விக்ரம் சாராபாய் 1919ஆம் ஆண்டு ஆகஸ்டு 12இல் பிறந்தார். 1940இல் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றார். சர்.சி.வி.இராமனிடம் மேல்நிலை ஆய்வுப் படிப்பை முடித்தபின் 1947இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
விக்ரம் சாராபாய் ‘வெப்ப மண்டலப் பகுதியில் காஸ்மிக் கதிர்கள்’ பற்றி ஆய்வு செய்தார்.
‘துணி ஆலை ஆய்வுக் கழகம்’ மற்றும் ‘இந்திய மேலாண்மை நிறுவனம்’ ஆகியவற்றைத் துவக்கினார். ‘இந்திய அணு ஆற்றல் ஆணையம்’ மற்றும் ‘இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்’ ஆகியவற்றிற்குத் தலைமையேற்றார்.
விக்ரம் சாராபாய் திட்டத்தின் அடிப்படையிலேயே இந்தியா ‘ஆரியப்பட்டா’ செயற்கைக்கோளை 1975இல் ரஷ்யாவின் உதவியுடன் விண்ணிற்கு அனுப்பியது.
தும்பா ராக்கெட் ஏவுதளம் அமைப்பதில் விக்ரம் சாராபாய் பெரும்பங்காற்றினார். விக்ரம் சாராபாயின், ஆய்வுப் பணியைப் பாராட்டி, 1966இல் பத்மபூஷன் விருது விக்ரம் சாராபாய்க்கு வழங்கப்பட்டது.
‘இந்திய விண்வெளி ஆய்வின் தந்தை’ என புகழப்படும் விக்ரம் சாராபாய் 1971 டிசம்பர் 30ஆம் நாள் காலமானார்.