விடிவுகாலம் – கவிதை

உணவு அளித்து
உயிர் கொடுத்த
உலகிற்கே உணவளிக்கும்
உழவனுக்குப் பரிசாய்…

உரத்தை நஞ்சாக்கி
மண்ணை மலடாக்கி
விதையை மரபணு மாற்றி
விளைச்சலை அழித்து..

வேளாண்மையை சிதைத்து
உணவளிப்பனுக்கே கடனளித்து
கடனை நேர் செய்ய
விளைநிலத்தைப் பிடுங்கி…

உழைப்பை உறிஞ்சி
உயிரைக் குடித்து
உண்ட உணவிற்கு
இரண்டகம் செய்யும்…

வஞ்சம் சூழ்ந்த
வக்கிர எண்ணம் மிகுந்த
பேராசை கொண்ட
மானிட குலம்…

உணவிற்கு அலைந்து
உடல் இளைத்து
மனம் வருந்தி
உளம் திருந்தி…

வேளாண்மைக்கு உயிரூட்ட
விளை நிலத்தில் இறங்கி
பயிர் செய்யும் நாள்
வெகு தொலைவில் இல்லை…

இன்னல்கள் பல சந்தித்து
இன்னுயிரை தியாகம் செய்து
இழந்த உரிமைகளை மீட்டெடுக்கும்
‘விடிவுகாலம்’ இதோ அருகாமையில்…

தமிழினி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: