விடிவு எப்பொழுது? தினமும் எதிர்பார்க்கிறோமே!
துன்பத்தின் பிடியில் இருந்து தப்பியாேட
விடிந்ததும் நல்லதொரு விடியலை எதிர்பார்க்கிறோமே!
நடப்பது எல்லாம் நமக்கு சாதகமில்லையே!
கால் வைத்திடும் இடமெல்லாம் பாதகமே!
இருந்தும் வாழ்கிறோம் பிறந்தோம் என்பதற்காகவே!
சாதியால் வெட்டுகிறான் மதத்தால் விரட்டுகிறான்
சிறுமிகளை கற்பழிக்க அனைத்தையும் மறக்கிறான்
மனிதனாய் வாழு என்றாலே சிரிக்கிறான்
நல்லவன் வாழ்ந்திட போராடிக் கொண்டிருக்கிறான்
தீயவன் வாழ்வின் நெறிமுறையில் விலகுகிறான்
நிலையில்லா உலகிலே விடிவுதான் வந்திடுமா?
கூ.மு.ஷேக் அப்துல் காதர்
கைபேசி: 9500421246
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!