தாலாட்டு

விடுகதைகள் – விடைகள் – பகுதி 3

1. முச்சந்தியில் மூன்று விளக்கு. பார்த்து நடந்தால் பாதுகாப்பு. அது என்ன?

சிக்னல்

 

2. மழையின் முன்னும் பின்னும் மாயாஜாலம் காட்டும். அது என்ன?

வானவில்

 

3. ஓரெழுத்து. பறக்கும். அது என்ன?

 

4. விண்ணைச் சிரிக்க செய்வாள்; கண்ணை பறிக்கச் செய்வாள். அது என்ன?

மின்னல்

 

5. கல்லிலே காய்ப்பது, தண்ணீரில் மலர்வது, அது என்ன?

சுண்ணாம்புக்கல்

 

6. காற்று வீசும் அழகான மரம். அது என்ன?

சாமரம்

 

7. கேடயமுள்ள வீரனுக்கு வாள் இல்லை. அது என்ன?

ஆமை

 

8. சின்ன மச்சான் குனிய வைச்சான். அது என்ன?

முள்

 

9. தண்ணீரோடு போகும் கல் எது?

விக்கல்

 

10. அறிவின் மறுபெயர்; இரவில் வருகிறது. அது என்ன?

மதி

 

11. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. என்ன பூ?

சிரிப்பு

 

12. உழைக்க உழைக்க உடம்பெல்லாம் தோன்றும். அது என்ன?

வியர்வை

 

13. பகலில் தூங்கி இரவில் விழிப்பான். அவன் யார்?

விண்மீன்கள்

 

14. தாய் சப்பாணி; மகள் குந்தாணி. அவள் யார்?

ஆட்டுக்கல் குழவி

 

15. ஒரு தட்டில் ஆயிரம் ஓட்டைகள்; அது என்ன?

சல்லடை

 

16. கண்ணில்லாதவன் குருடனுக்கு வழி காட்டுகிறான். அவன் யார்?

கைத்தடி

 

17. தாயின் வாயில் பிறப்பது; தரணியெங்கும் சிறப்பது. அது என்ன?

தாலாட்டுப் பாட்டு

 

18. நல்லதை அனுப்பிவிட்டு கெட்டதை வைத்துக் கொள்வான். அவன் யார்?

சல்லடை

 

19. நடக்க முடியாது; ஆனால் நகராமல் இருக்காது. அது என்ன?

கடிகாரம்

 

20. காக்கி சட்டைக்காரன்; காவலுக்குக் கெட்டிக்காரன். அவன் யார்?

போலீஸ்காரர்

 

21. வானத்துக்கும் பூமிக்கும் ஒரே க‌ம்பி. யார் அந்த தம்பி?

மழை

 

22. குழந்தைக்கு எந்தக் கை பலமான கை?

அழுகை

 

23. பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன?

தேங்காய்

 

24. கடித்தால் துவர்ப்பு; தண்ணீர் குடித்தால் இனிப்பு. அது என்ன?

நெல்லிக்காய்

 

25. ஓசையிடுவான்; உணவு சமைப்பான். அவன் யார்?

குக்கர்