விடுகதைகள் – விடைகள் – பகுதி 2

1. முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை. அது என்ன?

நாக்கு

 

2. மண்ணுக்குள் கிடப்பவன்; மங்களகரமானவன். அவன் யார்?

மஞ்சள்

 

3. தலையைச் சீவினால் தாகம் தீர்ப்பான். அவன் யார்?

இளநீர் / நொங்கு

 

4. அழுவேன்; சிரிப்பேன்; அனைத்தும் செய்வேன்; நான் யார் ?

முகம் பார்க்கும் கண்ணாடி

 

5. ஊரெல்லாம் ஒரே விளக்கு; அதற்கு ஒரு நாள் ஓய்வு. அது என்ன?

நிலா

 

6. நாலு காலுண்டு; வீச வாலில்லை. அது என்ன?

நாற்காலி

 

7. கடல் நீரில் வளர்ந்து, மழை நீரில் மடிவது என்ன?

உப்பு

 

8. கறுப்புச் சட்டைக்காரன் சட்டையைக் கழற்றினால் வெள்ளைக்காரன்; அவன் யார்?

உளுந்து

 

9. இந்த மானால் நடக்க முடியாது; எந்த மான்?

அந்தமான்

 

10. பன்னிரண்டு பிள்ளைகள் உள்ள பெரிய குடும்பத்தில், இந்த பிள்ளை மட்டும் சவலப்பிள்ளை. அவன் யார்?

பிப்ரவரி மாதம்

 

11. எல்லா இடத்திலும் இருப்பேன்; ஆனால் என்னைப் பிடிக்க முடியாது. நான் யார்?

காற்று

 

12. உரசினால் போதும் உயிர் முடிந்து போகும். அது என்ன?

தீக்குச்சி

 

13. மண்ணுக்குள்ளே மட்காத கயிறு. அது என்ன?

மண்புழு

 

14. நாலு கால் வீரன்; நன்றிக்கு உதாரணம். அவன் யார்?

நாய்

 

15. பச்சப் பெட்டியில் பத்துச்சரம் முத்து. அது என்ன?

வெண்டைக்காய்

 

16. விரிந்த ஏரியில் வெள்ளி ஓடம் மிதக்குது. அது என்ன?

சந்திரன்

 

17. தோலை உரித்தால் அழ மாட்டான்; உரித்தவனை அழவைப்பான். அது என்ன?

வெங்காயம்

 

18. கனத்த பெட்டி; கதவைத் திறந்தால் மூட முடியாது. அது என்ன?

தேங்காய்

 

19. உதைக்கத் தெரிந்தவனுக்கு உழைக்கவும் தெரியும். அது என்ன?

கழுதை

 

20. ஊர் முழுக்க ஒரே பந்தல். அது என்ன?

வானம்

 

21. ஒத்தைக்கால் கோழிக்கு வயிறு நிறைய முட்டை. அது என்ன?

மிளகாய்

 

22. உயரப் பறப்பவனுக்கு வால் உண்டு; கால் அல்ல. அவன் யார்?

பட்டம்

 

23. சிறகடித்துப் பறப்பவனை சமாதானத்துக்கு உதாரணம் என்பர். அவன் யார்?

புறா

 

24. பார்க்க அழகானவன்; பாம்புக்கு எதிரி. அவன் யார்?

மயில்

 

25. தலையை வெட்ட வெட்ட, கறுப்பு நாக்கை நீட்டும். அது என்ன?

பென்சில்