விடுகதைகள் – விடைகள் – பகுதி 7

1.விதையில் கிடைக்காத எண்ணெய்; செக்கில் எடுக்காத எண்ணெய். அது என்ன?

மண்ணெண்ணெய்

 

2. வெய்யிலிலே மலரும்; காற்றிலே உலரும். அது என்ன?

வியர்வை

 

3. வெள்ளை மாளிகைக்கு வாசல் இல்லை; வழியும் இல்லை. அது என்ன?

கோழி முட்டை

 

4. பச்சைக்கு ஓட்டம்; சிவப்புக்கு நிறுத்தம். அது என்ன?

போக்குவரத்து சிக்னல்

 

5. பச்சைக் குடத்திற்குள் இனிப்பான பானம். அது என்ன?

இளநீர்

 

6. தாளைக் கொடுத்தால் தின்னும்; தண்ணீர் குடித்தால் மடியும். அது என்ன?

நெருப்பு

 

7. கொடி உடம்புகாரிக்கு கூடையளவு பிள்ளை. அது என்ன?

பூசணிக்காய்

 

8. பச்சைப் புல்லில் துவண்டு வரும்; பவளம் போல் உருண்டு வரும். அது என்ன?

பனித்துளி

 

9. மஞ்சள் பெட்டிக்குள் சிவப்பு முத்துக்கள். அது என்ன?

மாதுளம்பழம்

 

10. கூடும் வைத்திருப்பான்; வீடும் வைத்திருப்பான். அவன் யார்?

நத்தை

 

11. ஊருக்கெல்லாம் ஒரே மூக்குத்தி; ஒளி வீசும் மூக்குத்தி. அவள் யார்?

சந்திரன்

 

12. ஆழ்கடலில் கிடைப்பவனுக்கு ஆயிரமாயிரம் பண மதிப்பு. அவன் யார்?

முத்து

 

13. தண்ணீர் இல்லாத தடாகத்தில் தாவிப் பாயுது ஒரு கப்பல். அது என்ன?

ஒட்டகம்

 

14. குட்டி போடும்; ஆனால் எட்டிப் பறக்கும். அது என்ன?

வெளவால்

 

15. மூக்கைத் தட்டி வாயில் போட்டேன். அது என்ன?

வேர்க்கடலை

 

16. ஒரு எழுத்து; எழுத உதவும், அது என்ன?

கை

 

17. கண்ணுண்டு; பார்வையில்லை. அவன் யார்?

ஊசி

 

18. அடித்தால் அழுவான்; பிட்டால் சிரிப்பான். அவன் யார்?

தேங்காய்

 

19. அரைச் சான் ராணி; அவளுக்குள்ளே ஆயிரம் முத்துக்கள். அது என்ன?

வெண்டைக்காய்

 

20. இதயம் போல் துடிதுடிக்கும்; இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?

கடிகாரம்

 

21. உச்சிக் கிளையிலே ஒரு முழக்குச்சி, ஊசல் ஆடுது. அது என்ன?

முருங்கைக்காய்

 

22. உயிர் இல்லாமல் ஓடித் திரிவான்; மூக்கு இல்லாமல் மூச்சு விடுவான். அவன் யார்?

புகைவண்டி (ரயில்)

 

23. பாடி அழைப்பான்; உறவை கூடி உண்பான் உணவை. அவன் யார்?

காகம்

 

24. சங்கீத பாட்டுக்காரன்; சுமை தூக்க அஞ்சமாட்டான். அவன் யார்?

கழுதை

 

25. வெயிலுக்கு காய்வான்; தண்ணீருக்கு பொங்குவான். அவன் யார்?

சுண்ணாம்பு

 

26. காற்றாடி பறப்பதேன்? கல்வி வளர்வது எதனால்?

நூலினால்

 

27. மூன்று கண்களிருக்கும்; இவனால் பார்க்க முடியாது. யார் அவன்?

தேங்காய்