விடுகதைகள் – விடைகள் – பகுதி 4

வாழை

1. அவன் கழற்றிய சட்டையை அடுத்தவர் போட முடியாது. அவன் யார்?

பாம்பு

 

2. பகலில் சுருண்டு கிடப்பான்; இரவில் விரிந்து படுப்பான்; அவன் யார்?

பாய்

 

3. சின்னக் கதவுகள்; எத்தனை தடவைகள் திறந்து மூடினாலும் ஓசை, தராத கதவுகள்; அது என்ன?

கண்ணிமை

 

4. கையிலே அடங்குவார்; கதை நூறு சொல்வார்; அவர் யார்?

புத்தகம்

 

5. விபத்தில்லாமல் வெடிப்பான்; காற்றில் சிதறி பறப்பான்; அவன் யார்?

பருத்தி

 

6. வெள்ளைக் கோட்டைக்குள்ளே அண்ணன், தம்பி இருவர். அவர்கள் யார்?

நிலக்கடலை

 

7. பறக்கும் ஆனால் பறந்து போகாது. அது என்ன?

கொடி

 

8. மண்ணுக்குள்ளே இருந்தவன் கூட்டுக்குள்ளே இருப்பான். அவன் யார்?

வேர்க்கடலை

 

9. பச்சை, வெள்ளை, கருப்பு பக்குவமானால் சிவப்பு; அது என்ன?

வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு

 

10. கலகல சத்தத்துடன் கைக்கு அழகானவன்; அவன் யார்?

வளையல்

 

11. சங்கீத பாட்டுக்காரன், மழையில் கச்சேரியே செய்வான்; அவன் யார்?

தவளை

 

12. தேடாமல் கிடைக்கும் பல்; தேடும் செல்வத்தைக் குறைக்கும் பல். அது என்ன?

சோம்பல்

 

13. அடிமேல் அடிவாங்கி அனைவரையும் சொக்க வைக்கும். அது என்ன?

மிருதங்கம்

 

14. இரவல் கிடைக்காதது, இரவில் கிடைப்பது. அது என்ன?

தூக்கம்

 

15. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?

சிரிப்பு

 

16. பறக்காத பூப்பந்து, பகட்டான சிறுபந்து, வாயிலே போட்டால் தேன்பந்து. அது என்ன?

லட்டு

 

17. பூக்காத பூ என்ன பூ? அது என்ன பூ?

குங்குமப்பூ

 

18. தண்ணீரில் விளையும் கல், தண்ணீரில் கரையும் கல்; அது என்ன?

உப்புக்கல்

 

19. அண்ணனுக்கு எட்டாது, தம்பிக்கு எட்டும். அது என்ன?

உதடு

 

20. அடி காட்டில்; நடு மாட்டில்; நுனி வீட்டில்; அது என்ன?

நெல்

 

21. இவன் அழுதால் தான் உலகம் சிரிக்கும். அவன் யார்?

வானம்

 

22. உச்சிக் கிளையில் சாட்டை தொங்குது. அது என்ன?

முருங்கைக்காய்

 

23. குடிக்கலாம்; அடிக்கலாம். அது எது?

காப்பி

 

24. எல்லோருக்கும் கிடைக்காத மதி; எல்லோரும் விரும்பும் மதி. அது என்ன?

நிம்மதி

 

25. மரம் வழுக்கும்; காய் துவர்க்கும்; பழம் இனிக்கும். அது என்ன?

வாழை