இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதற்காக நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
இந்திய விடுதலை பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது, வருங்கால இந்தியாவிற்கு வழிகாட்டியாய் அமையும் என நினைக்கிறோம்.
எனவே வாசகர்கள் தங்கள் கருத்துக்களைக் கட்டுரை வடிவில் அனுப்புமாறு வேண்டுகிறோம்.
குறைந்தது 300 வார்த்தைகள் இருக்குமாறு கட்டுரை அமையட்டும்; அதிக வார்த்தைகள் என்ற கட்டுப்பாடு கிடையாது.
கட்டுரையை பாமினி அல்லது யுனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்து admin@inidhu.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
கட்டுரைகளுக்குப் பணமோ பரிசோ கிடையாது.
தேர்ந்தெடுக்கப்படும் நல்ல கட்டுரைகள் இனிது இணைய இதழில் தங்கள் பெயரில் வெளியிடப்படும்.
நாட்டைப் பற்றிக் கொஞ்சம் யோசியுங்கள்!
கட்டுரையாக அதை எழுதுங்கள்!
நாளைய இந்தியாவில் உங்களின் பங்கும் இருக்கட்டும்!
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!