இதற்கு முன்பு பிடித்திருந்த கைகளை
வெடுக்கென்று உதறிவிட்டு
இங்கு இழுத்து வந்தது காலம்!
இப்போது வேறு யாரோ சிலர் வருகிறார்கள்
முன்பை விட
கெட்டியாகத் தான் பிடிக்கப் பார்க்கிறேன்!
இவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?
கழுத்தில் காலர் பெல்ட் கட்டப்பட்ட
ஒரு நாய்க் குட்டியைப் போலத்தான்
இங்கிருந்தும் இழுத்துச் செல்லப்படுவேன்!
ச.குரு பிரசாந்
மதுரை
கைபேசி: 9965288806
மின்னஞ்சல்: srguruprasandh111@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!