விதைகள் எப்போதும் தூங்குவதில்லை
மண் மட்டுமல்ல மனதும்
விதைகளைத் தூங்க விடுவதில்லை!
நல்ல விதைகள் நற் பலன்களைத்
தரவும் தயங்குவதில்லை!
நல்ல எண்ணங்களுக்கும்
இது பொருந்தும் தானே!
நல்லதை விதைப்போம்
நயம்பட விதைப்போம்
அன்பையே விதைப்போம்
ஆனந்த உலகினை
ஆக்கியே மகிழ்வோம்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!