மற்றவர்கள் விமர்சிக்கிறார்கள் என எண்ணாதே
எல்லாவற்றையும் விமர்சிக்கும் உலகமடா
நல்லா வாழ்ந்தாலும் விமர்சிக்கும்
நாம் தாழ்ந்தாலும் விமர்சிக்கும்
விமர்சனங்களை மனதிற்கு வெளியே நிறுத்து
உள்ளே சென்றால் அது மாற்றும் உன் பாதையை
உன் வாழ்க்கையை தீர்மானிப்பது நீயே
ஒருபோதும் விமர்சனங்களுக்கு வாய்பளிக்காதே
கறந்த பால் ஆயுள் இரண்டு மணி நேரமே
காய்ச்சிய பாலுக்கு சிலமணி நேர வாழ்வு
தயிராய் மாற்றினால் ஒருநாள் தாங்கும்
வெண்ணையாய் மாற்றினால் ஒருவாரம்
நெய்யாய் மாற்றினால் சில மாதங்கள்
பாலின் படிநிலை போல தான் வாழ்வு
உருக்க உருக்க உயர்வுதான்
விமர்சனத்தால் கடினமென
எந்த செயலிலிருந்தும் ஒதுங்கி விடாதே!
விமர்சனங்களை விரட்டியடி !
உயர பறக்கும் என்றும் உன் கொடி!!
இரா.முத்துக்கருப்பன்
கீரனூர்
தூத்துக்குடிமாவட்டம்