இறக்கை கட்டிப் பறந்ததடி
நெஞ்சம் மேகத்தினில் புகுந்ததடி
கண்கள் ரெண்டும் பார்க்குதடி
கைகள் ரெண்டும் கவி எழுதுதடி
வாழ்க்கை போர்க்களமே
காதல் கலைகளின் சங்கமமே
வீதி வரும் ஊர்வலமே
வியந்து நிற்கும் உன் மனமே
கவிதை படி காதல் படி
கணக்கு படி உலகம் படி
உன்னைப் படி உறவு படி
நெருங்கும்படி பேசும்படி
கனவு படி கற்பனை படி
நினைவு படி நித்தமும் படி
சிந்தனை படி சீர்திருத்தம் படி
உள்ளத்தைப் படி உண்மையைப் படி
அறத்தைப் படி அன்பைப் படி
புரட்சி படி புதுமை படி
இயற்கை படி இலக்கியம் படி
துன்பம் படி இன்பம் படி
உன் மனம் நம்பும்படி
எதை வேண்டுமானாலும் விரும்பும்படி
மனித வாழ்க்கையின் இலக்கணம்
இவன்தான் என எண்ணும்படி
சமூகத்தின் இதயம் படி
வாழ்க்கை போர்க்களமே
காதல் கலைகளின் சங்கமமே
வீதி வரும் ஊர்வலமே
வியந்து நிற்கும் உன் மனமே
கருவறையில் உயிராகி
வகுப்பறையில் நடமாடி
திரையில் நடனமாடி
அன்பில் உறவாடி
அரசியலில் களவாடி
அடுப்படியில் பசியாற்றி
சட்டம் தன் கடமையாற்றி
சடங்குமுறை பின்பற்றி
சாதிமுறை பின்பற்றி
சமயநெறி பின்பற்றி
கடைசியில் கல்லறையில் உறங்கும் உன்னை
எந்த முறையாவது ஒரு முறையாவது
தட்டி எழுப்பியிருக்குமா?
வாழ்க்கை போர்க்களமே
காதல் கலைகளின் சங்கமமே
வீதி வரும் ஊர்வலமே
வியந்து நிற்கும் உன் மனமே
விருப்பங்கள் விற்பனையாவதும்
ஆசைகள் அடிமையாவதும்
பாசங்கள் பாதிப்புக்குள்ளாவதும்
கருணை கறைபடிந்து போவதும்
நேர்மை தள்ளாடுவதும்
அன்பு அலட்சியமாவதும்
பண்புக்குக் கடுமையாய்ப் பாடம் கற்பிப்பதுமென
உலகம் வாடிக்கையாக வைத்திருக்கிறதே
வேடிக்கை பார்க்கும் மனிதனே
ஒருநாளும் யோசித்ததே இல்லையோ?
இல்லை நீயும் வேடிக்கை பார்க்கும்
வாடிக்கையாளன் தானோ?
இறக்கை கட்டிப் பறந்ததடி
நெஞ்சம் மேகத்தினில் புகுந்ததடி
கண்கள் ரெண்டும் பார்க்குதடி
கைகள் ரெண்டும் கவி எழுதுதடி
வாழ்க்கை போர்க்களமே
காதல் கலைகளின் சங்கமமே
வீதி வரும் ஊர்வலமே
வியந்து நிற்கும் உன் மனமே

ப. கலைச்செல்வன்
இளங்கலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு
பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி
திருச்சி-23
கைபேசி: 9385517371
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!