சிலபேர் பழனி முருகனுக்கும், சிலபேர் திருச்செந்தூர் முருகனுக்கும், சிலபேர் ஐயப்பனுக்கும், முப்பது நாற்பது நாட்கள் காலையில் குளித்து விட்டு விரதம் இருந்து ஒருவேளை மட்டும் சாப்பிட்டுவிட்டு இருக்கிறார்கள். அது நல்லது தான்.
அவர்கள் சில கட்டுப்பாட்டுடன் ஆண்டவனிடத்தில் சத்தியம் செய்து விட்டு மது அருந்தாமலும் மாமிசம் சாப்பிடாமலும் இருக்கிறார்கள்; உடல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்; தவறு இல்லை நல்லது தான்.
சிலர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வந்தவுடன், நாற்பது நாட்கள் இருந்த விரதத்தை மறந்து மது அருந்துகிறார்கள், புலால் உணவை சாப்பிடுகிறார்கள்.
இதை தப்பு என்று சொல்லி கோவிலுக்கு அழைத்து சென்ற குருநாதர்கள் சொல்ல வேண்டும்.
கோவிலுக்கு போகும் முன்பே இதை சொல்ல வேண்டும்.
நாற்பது நாட்கள் மட்டும் நேர்மையாய் இருந்துவிட்டு பழையபடி தப்பு செய்தால் ஆண்டவனுக்குத் தெரியாதா?
ஆண்டவனுக்கு எல்லாமே தெரியும்.
யாரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
உயிரைக் கொன்று சாப்பிட்டால் பாவம்.
மது சாப்பிட்டால் உடம்புக்கு கேடு.
எனவே மறுவருடம் கோவிலுக்கு போவதற்கு முன்பே கெட்ட பழக்கத்தை விடவேண்டும். அதற்கான பயிற்சிதான் விரதங்கள்.
கெட்ட பழக்கங்களை விடாமல் செய்து கொண்டு இருந்தால், கடவுள் பெயரை சொல்லிக் கொண்டு ஊரையும் மக்களையும் ஏமாற்றி வேஷம் போடுவதாகத்தான் அர்த்தம்.
எல்லா வேஷமும் கடவுளுக்கும் தெரியும்.
ஆண்டவனை யாரும் ஏமாற்ற முடியாது.
இதுதான் உண்மை. இதை கண்டிப்புடன் குருநாதர்கள் பக்தர்களுக்கு சொல்ல வேண்டும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!