விரிந்த தளம் கொண்ட வலம்

மாத இதழாக வெளிவரும் வலம் இதழின் பொறுப்பாசிரியர்களாக அரவிந்தன், நீலகண்டன், ஜடாயு மற்றும் ஹரன் பிரசன்னா ஆகியோர் உள்ளனர்.

80 பக்கங்களுடன் கருப்பு ‍வெள்ளையில் மாதம் தோறும் ‘வலம்’ இதழ் வெளிவருகிறது.

வரலாறு, அரசியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட எல்லாத் துறைகளைச் சேர்ந்த ஆழமான விரிவான கட்டுரைகளை வலம் இதழ் தாங்கி நிற்கிறது.

சமரசமின்மை, நேர்மை, நுண்ணிய பார்வையுடன் செயல்படும் ஓர் இதழாக ‘வலம்’ விளங்குவதை நாம் காணலாம்.

முதல் இதழ் விஜயதசமி அன்று அக்டோபர் 11, 2016ல் வெளிவந்தது. இன்று வரைத் தொடர்ந்து வெளிவரும் இவ்விதழ், தமிழில் படைப்பாக்க முயற்சியையும், சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது என்றால் அது மிகையாகாது.

இவ்விதழ் அச்சு இதழாகவும், மின்னிதழாகவும் வாசகர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மின்னிதழை இலவசமாகக் அமோசான் கிண்டில் தளத்திலும், நம்மபுக்ஸ் தளத்திலும் படித்துத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சிந்தனைகள் கூர்மைப்பட வேண்டுமானால், இது போன்ற இதழ்களை வாசிக்கப் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.

நமது தலைமுறை நேர்கோட்டில் சரியான பாதையை நோக்கிச் செல்லப் பன்முகத்திறன் நமக்குத் தேவையாகும். அதை இவ்விதழ் நிறைவேற்றும்.

வலம் இதழில் வெளிவரும் படைப்புகளை, நாம் தெரிந்து கொண்டால் வெளிவந்திருக்கும் அனைத்து இதழ்களையும் படிக்க ஏதுவாக அது அமையும் என்பதால், இருமாதங்களில் வெளிவந்த இதழின் படைப்புகள் கீழே தரப்படுள்ளன.

வலம் பிப்ரவரி 2021 இதழின் உள்ளடக்கம்

விவசாயிகள் போராட்டம் – வழி மாறியதா வெள்ளாடு? | ஜெயராமன் ரகுநாதன்

போர்க்கால தேவதைகள் | அருண் பிரபு

மகாபாரதம் கேள்வி பதில் – 11 | ஹரி கிருஷ்ணன்

வரம்பற்ற அதிகாரமும் பொறுப்பற்ற தன்மையும் | சுசீந்திரன்

சில பயணங்கள் சில பதிவுகள் – 34 | சுப்பு

இந்தியா புத்தகம் 9 | முனைவர் வ.வே.சு

சி.வி.ராமன் (1888-1970) | பா.சந்திரசேகரன்

சோழாந்தக சதுர்வேதி மங்கலம் (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

துரதிர்ஷ்டக் கப்பல்: லெபானான் வெடிவிபத்து | தமிழில்: ஜெயகுமார் ஸ்ரீனிவாசன்

லும்பன் பக்கங்கள் – 3 | அரவிந்தன் நீலகண்டன்

வலம் டிசம்பர் 2020 இதழின் உள்ளடக்கம்

நேருவின் வரலாற்றுத் தவறு | கோலாகல ஸ்ரீநிவாஸ்

பள்ளிக் கல்வியில் ஆங்கிலமும் தாய்மொழியும் | ஜெயராமன் ரகுநாதன்

பாஜக வடகிழக்கை வென்ற வரலாறு புத்தகத்தின் முன்னுரை | எஸ்.ஜி. சூர்யா

சாதனம் நான்கு: வேதாந்த விசாரத்திற்கான அடிப்படைத் தகுதிகள் – ஜடாயு

ஓட்டம் (கம்யூனிச‌த் திரைப்படங்கள்) | அருண் பிரபு

மகாபாரதம் கேள்வி பதில் (பகுதி 9) | ஹரி கிருஷ்ணன்

சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு

பூனைக் கதைகள் | சுஜாதா தேசிகன்

இந்தியா புத்தகங்கள் 7 | முனைவர் வ.வே.சு.

லும்பன் பக்கங்கள் – பகுதி 1 | அரவிந்தன் நீலகண்டன்

வலம் இதழின் படைப்பு உள்ளடக்கத் தலைப்புகள் கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளன. இதனைச் சொடுக்குவதன் மூலமும் நேரிடையாகப் படைப்புக்குச் செல்லலாம்.

அறிவிப்புகள்

அஞ்சலி

அரசியல்

அறிவியல்

ஆன்மிகம்

கட்டுரை

கல்வி

சினிமா

சிறுகதை

சுயசரிதை

தொடர்

நூல் அறிமுகம்

நேர்காணல்

பயணம்

பொருளாதாரம்

மகாபாரதம் கேள்வி பதில்

மருத்துவம்

முழுமையான இதழ்

லும்பன் பக்கங்கள்

வரலாறு

விளையாட்டு

விவசாயம்

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை

வலம் இதழைப் படித்துத் தனது திறனை மேம்படுத்திக் கொள்ள http://valamonline.in/e-magazine எனும் சொடுக்கியைச் சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com

One Reply to “விரிந்த தளம் கொண்ட வலம்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.