விருதுநகர் மாவட்டம் தன் பெயரை போலவே விருதுபெறும் வகையில் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
1.ரமண மகரிஷி அவதரித்த இடம் (திருச்சுழி)
2.தமிழக முதல்வர்களை தந்த மாவட்டம் (குமாரசாமி ராஜா, காமராஜர்)
3..சாத்தூர் சேவு
4. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
5.சிவகாசி பட்டாசு ,காலண்டர்,டைரி,பாட புத்தகங்கள்
6.இந்தியாவின் வணிக தலைநகரமாக எண்ணைவித்துக்கள், தானியங்கள்,டின் தொழில்களில் முற்றொருமை பெற்று விளங்குகிறது விருதுநகர்.
6.தமிழக அரசின் சின்னமான ஆண்டாள் கோயில் கோபுரம்
7.சித்தர்கள் இன்றும் வாழ்வதாக நம்பப்படும் மகாலிங்க மலை.
8.நைட்டீஸ் ,பெண்களின் உள்ளாடைகள்,தயாரப்பில் முன்னணயில் உள்ள தளவாய்புரம்.
9.ஆசியாவிலேயே பேண்டஜ் துணிகள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் சத்திரப்பட்டி.
10. இன்றும் கைத்தறி நெசவுத்தொழில் சிறந்து விளங்கும் அருப்புகோட்டை .
11.இந்தியாவையே தன் நடிப்பால் கலக்கிய ஸ்ரீதேவி என்ற அழகு மயில் பிறந்த ஊர் மீனம்பட்டி.
12. வெள்ளையனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தியாகி சங்கரதாஸ் பிறந்த ஊர்.
13.தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட உண்ணா நோன்பு இருந்து உயிர் விட்ட
தியாகி சங்கரலிங்கனார் பிறந்த ஊர் .
14. இருக்கன்குடி ,திருவண்ணாமலை , ஆண்டாள் கோயில் ,விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் ,திருச்சுழி திருமேனிநாதர் திருகோயில் ,திவ்ய
தேசங்களில் ஒன்றான திருத்தங்கள் நின்ற நாராயண பெருமாள்.
15.ராஜபாளையம் நாய்
16.ஸ்பின்னிங் மில்கள் அதிக அளவில் உள்ள ராஜபாளையம்.
17.பிரசித்திபெற்ற ராம்கோ ,ஆலங்குளம் அரசு சிமென்ட் தொழிற்சாலைகள் .
18. உலக அளவில் முன்னணயில் உள்ள தீப்பெட்டி தொழில் .
19.வீடு தோறும் கைப்பிடி அரிசி கொடுத்து KVS கல்வி நிலையங்கள் உருவாகிய ஊர்.
20.தமிழகத்திலேயே முதன் முறையாக மழை நீர் வடிகால்கள் அமைத்து ஊர் மத்தியில் அமைந்துள்ள தெப்பத்தில் நீர் தேக்கியது விருதுநகரில் தான்.
21.விருதுநகரில் இருந்து 45 கி.மீ தொலைவில் சாம்பல் நில அணில்கள் சரணாலயம்
அமைந்துள்ளது. வழக்கமான அணில்களை விட பெரியதாக, சாம்பல் நிறத்தில் இந்த அணில் இருக்கும். இந்த அரிய வகை அணில் இந்த சரணாலயத்தில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பறக்கும் அணில், சிங்கவால் குரங்கு, யானை,
மான் மற்றும் பறவைகள் இங்கு காணப்படுகின்றன.
22. விருதுநகர் எண்ணை புரோட்டா …..
23.சபரிமலை பக்தர்கள் மற்றும் இதர கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் கழுத்தில்
அணியும் துளசி மணி மாலை ,ஸ்படிக மாலை புனைந்து இந்திய முழுவதும் அனுப்பும்
துலுக்கப்பட்டி .
24.வெள்ளையனுக்கு எதிராக தமிழர் வீரத்தை உலகிற்கு உணர்த்திய மருது சகோதரர்கள் பிறந்த முக்குளம் .
25.பல ஆண்டுகளாக அரசு [பொது தேர்வுகளில் முதல் இடம் பிடித்த மாவட்டம்.
இவை விருதுநகர் மாவட்டம் கொண்டுள்ள சிறப்புகள்.