நீ என்பதில் நானும் இருக்கிறேன்
அதனால் தான் என் விருப்பத்தைச் சொல்கிறேன்
எனக்கான பாதையில் பயணிக்கிறேன்
அங்கிருந்து தான் எல்லாவற்றையும் பார்க்கிறேன்
தெரிந்தோ தெரியாமலோ
நான் அங்கேயே நிற்கிறேன்
வெளியில் இருப்பதை
மாற்றி அமைக்கிறேன்
சரி செய்கிறேன்
காலத்தைப் பிடுங்கித் தின்னும்
மக்கள் கூட்டத்தின் முன்னே
கரையைத் தட்டுகிறது அலை
தேடிக்கொண்டே இருக்கும் நான்
தேள் கொட்டியது போல்
கிடைக்கும் வார்த்தைகளின் பின்
இருக்கும் சாத்தியங்களை
உரித்த வெங்காயம் போல்
எங்கு வேண்டுமோ
அங்கு நிறுத்துகிறேன்