குளிர்கால ஆர்டிக் நரி

விலங்குகளின் பாதுகாப்பிற்கான தகவமைப்புகள்

விலங்குகளின் பாதுகாப்பிற்கான தகவமைப்புகள் இயற்கையிலேயே சிறப்பாக அமைந்துள்ளன.

அவற்றின் மூலம் தங்களைப் பிற விலங்குகளிடமிருந்தும், சுற்று சூழல்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்கின்றன.

அவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

கூட்டம்

யானைகள், மீன்கள், பறவைகள் போன்றவை கூட்டமாக வாழ்ந்து, தங்களைத் தங்களின் எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்கின்றன.

யானைகள் தங்களின் குட்டிகளை நடுவில் வைத்து, பெரிய யானைகள் அதனைச் சுற்றி வட்டமாக நின்றும், நடந்து கொண்டும் குட்டிகளைக் காப்பாற்றும்.

யானைக் கூட்டம்யானைக் கூட்டம்

கொம்பு

காண்டாமிருகங்கள், காட்டு மாடுகள் போன்றவை தங்களின் கூரிய கொம்புகளால் எதிரிகளைத் தாக்கித், தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன.

காட்டு எருமைகாட்டு எருமை

 

காண்டாமிருகம்
காண்டாமிருகம்

ஓடு

நந்தைகள், ஆமைகள் போன்றவை, தங்களின் முதுகுப்பகுதியில் உள்ள கடிமான ஓடுகளில் பதுங்கிக் கொண்டு, தங்களை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்கின்றன.

நத்தைநத்தை

 

ஆமை
ஆமை

 

ஓடும் கால்கள்

சில விலங்குகள் வலிமையான, அதிகவேகமாக ஓடும் திறன் பெற்ற கால்களைக் கொண்டுள்ளன.

எதிரிகள் தங்களை தாக்க வரும் போது, வேகமாக ஓடித் தப்பித்துக் கொள்கின்றன. எடுத்துக்காட்டாக மான்கள், கங்காருகள் போன்றவற்றைக் கூறலாம்.

மான்மான்

மை

கணவாய் மீனானது தன்னுடைய உடல் பகுதியில் மை உள்ள திசுப்பை அமைப்பைக் கொண்டுள்ளது. அது எதிரிகள் அருகில் உள்ளதாக உணர்ந்தால், தன்னுடைய திசுப்பையில் உள்ள மையை தண்ணீரில் வெளியிடும்.

இதனால் தண்ணீரின் நிறம் மாறும். எதிரி விலங்குக்கோ நிறம்மாறிய தண்ணீர் குழப்பத்தைத் தரும். இச்சமயத்தில் இம்மீனானது அவ்விடத்தைவிட்டுப் பாதுகாப்பான பகுதிக்குச் சென்றுவிடும். ஆக்டோபஸ்கள், ஸ்குவிடுகள் போன்றவைகளும் மை போன்ற திசுப்பை அமைப்பைக் கொண்டுள்ளன.

கணவாய் மீன்கணவாய் மீன்

உரு மறைப்பு

சிலவிலங்குகள் தாங்கள் வசிக்கும் சுற்றுசூழலுக்கு ஏற்ப உடல்அமைப்பு மற்றும் நிறத்தினைக் கொண்டுள்ளன. இதனால் எதிரிகள் அவற்றைக் கண்டுபிடித்து உணவிற்காக கொல்வது என்பது கடிமானதாகும். இதனையே உரு மறைப்பு என்கிறோம்.

உருமறைப்பிற்கு சில உதாரணங்களைக் காண்போம்.

துருவக் கரடியானது தான் வாழும் பனிசூழ்ந்த பகுதிக்கு ஏற்வாறு வெண்ணிற முடிகளைக் கொண்டுள்ளது. எனவே பனிசூழ்ந்த இடத்தில் இதனைக் கண்டுபிடிப்பது கடினம்.

பனிக்கரடிகள்பனிக்கரடிகள்

 

ஆர்டிக் பகுதியில் இருக்கும் ஆர்டிக் நரி மற்றும் ஆர்டிக் முயலானது, குளிர் காலத்தில் பனிக்கு ஏற்ற வெள்ளைநிற முடியையும், கோடை காலத்தில் பனி இல்லாத பழுப்புநிற சுற்றுசூழலுக்கு ஏற்ப பழுப்பு நிற முடிகளையும் கொண்டிருக்கின்றன.

குளிர்கால ஆர்டிக் நரிகுளிர்கால ஆர்டிக் நரி

 

கோடைகால ஆர்டிக் நரி
கோடைகால ஆர்டிக் நரி

 

இலைப்பூச்சி இலை வடிவத்தில் பச்சை நிறத்திலும், குச்சிப்பூச்சி குச்சி வடிவத்தில் பழுப்பு நிறத்திலும் இருக்கின்றன.

குச்சி பூச்சிகுச்சி பூச்சி

இடம் பெயர்தல்

சில விலங்குகள் உயிர் வாழ்வதற்காக சூழ்நிலைக்கு ஏற்ப சிலநடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

குளிர் நிறைந்த துருவப் பகுதிகளில் இருக்கும் பறவைகள் மற்றும் விலங்குகள் குளிர்காலத்தில் நிலவும் கடும் குளிரிலிருந்து தப்பிக் கொள்ளவும், உணவிற்காகவும் வெப்பமான இடத்திற்கு இடம் புலருகின்றன.

குளிர்காலம் முடிந்ததும் இவ்விலங்குகள் மற்றும் பறவைகள் துருவப் பகுதிக்கு திரும்பி வருகின்றன. இதனை வலசை வருதல் என்கிறோம்.

வலசை வரும் பறவைகள்வலசை வரும் பறவைகள்

உறக்கம்

சில பாம்புகள், பல்லிகள், தவளைகள் போன்றவை கோடை காலத்தில் உணவினை அதிக அளவு உட்கொண்டு கொழுப்பாக மாற்றிக் கொள்கின்றன.

குளிர்காலத்தில் இவ்விலங்குகள் குகைகளிலும், பூமிக்கு அடியிலும் சென்று உறங்குகின்றன. அப்போது இவ்விலங்குகள் சேமித்து வைத்திருக்கும் கொழுப்பினை ஆற்றலுக்காக பயன்படுத்துகின்றன. இதனையே குளிர்கால உறக்கம் என்கிறோம்.

குளிர்கால உறக்கத்தில் உள்ள வவ்வால்குளிர்கால உறக்கத்தில் உள்ள வவ்வால்

 

நுரையீரல் மீன்கள், பாலைவன முதலைகள் போன்ற சிலவிலங்குகள் கோடைகாலத்தின் வெப்பத்தையும், உலர்ந்த சூழலையும் சமாளிக்க நீண்ட உறக்கத்தினை மேற்கொள்கின்றன. இதனையே கோடை உறக்கம் என்கிறோம்.

நுரையீரல் மீன்கள்நுரையீரல் மீன்கள்

 

விலங்குகளின் பாதுகாப்பிற்கான தகவமைப்புகள் பற்றி அறிந்து கொண்டீர்கள்தானே?

வ.முனீஸ்வரன்

 


Comments

“விலங்குகளின் பாதுகாப்பிற்கான தகவமைப்புகள்” அதற்கு 2 மறுமொழிகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.