எப்போதும் எந்த சூழலிலும்
நம் கண்களுக்கு எதிர்காலப்
பாதையை காட்டும் விளக்கு!
தப்பாக தவறாக நாம்
செல்லாது தடுக்கும் தடுப்பு!
ஒப்புக்கல்ல வாழ்க்கை
உயர்வுக்கு என உண்மை
உணர்த்தும் ஆசான்!
அதுவே நம் உள்ளுணர்வு …
அது சொன்னது கேட்க
வாழ்க்கை இனிக்கும்
மனம் மலர்ந்து சிரிக்கும்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942