ஒத்தையில வெள்ளி ஒன்னு முழிச்சிருக்க
உன்னை தேடி நான் வர பார்த்திருப்ப
அத்தையவள் காவலில நீயும் இருக்க
ஆத்தாடி நான் இப்ப என்ன செய்யவோ
வித்தைக்காரி நீயும் வர துடிச்சுருப்ப
விளக்கில திரிபோல கருகிருப்ப
மொத்தத்தில்என் மனச புரிஞ்சிருப்ப
மோகமில்லா காதல் இது தெரிஞ்சிருப்ப
எத்தனையோ காதல் கதை உலகத்திலே
இதுவரை நடந்தது படிச்சிருப்ப
அத்தனையும் நம்ம காதல் போல வருமா
அம்மாடி என் வாழ்வே நீதானம்மா
முத்தமொன்னு நான் கேட்டா முறைச்சிப்ப
முள்ளில்லா தேன் பலாபோல இனிச்சிருப்ப
பித்தனாக என்னயுமே சுத்தவிடுவ
பொண்ணு கேட்டு வந்தபோது சிரிச்சருப்ப
குத்தமில்லா சூரியன் போல் ஜொலிச்சிருப்ப
கொஞ்சும் தமிழ் பாட்டும் கூடபாடி வருவ
நித்தம் என் வீட்டிலதான் விளக்கெரிக்க
நீ வந்திடத்தான் ஊரும் இங்க காத்துக்கிடக்கு
கைபேசி: 9865802942
மறுமொழி இடவும்