மருத்துவரான தன் சகோதரனின் கடிதம் வாயிலாக
தமிழகப் பெண்களின் நிலை அறிந்து
(அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு)
தன் சொந்த நகையினை அனுப்பி
மகளிருக்காக பள்ளி கல்லூரி துவங்கிய
மாற்றுத் திறனாளி சாராள் தக்கார்
தொடர்ந்து தனது கல்விச்சேவையினை
தொடர இயலமால் மறைந்துவிட
அவரது கனவினை நனவாக்கி காட்டினர்
அவரது தோழிகள்…
உடலால் மாற்று திறனாளி
உள்ளத்தால் மாற்று திறனாளிகளாக
இருந்த தென்தமிழக பெண்களின்
வாழ்க்கையில் விளக்கேற்றிய பெருமாட்டி
சாராள் தக்கார் தொண்டினைப் போற்றி மகிழ்வோம்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
சாரா டக்கர் கல்லூரி (Sarah Tucker College) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும்.
இதுவே தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் மகளிர் கல்லூரி ஆகும்.