விளையாடு விளையாடு
நாளும் பொழுதும் விளையாடு
விளையாடு விளையாடு
விளையாட்டு வினையாகாமல் விளையாடு!
தமிழோடு விளையாடு
தவறின்றி பேச எழுதத்
தமிழோடு விளையாடு!
நெகிழ்வான கணக்கோடு
நித்தம் நீ விளையாடு
கூட்டல் கழித்தல் வகுத்தல் பெருக்கல்
என கணக்கோடு விளையாட
வாழ்க்கையில் நமக்கு
என்றும் இல்லை சறுக்கல்
என்றே விளையாடு!
அறிவைப் பெருக்க எப்போதும்
அறிவியலோடு விளையாடு
அறிவியல் துணையால் அகிலம்
அழகாய் ஆனதை எண்ணி விளையாடு!
வரலாறோடு விளையாடு
வாழ்ந்து மறைந்த முன்னோர் கதையை
அறிந்திட அதனுடன் உறவாடு!
விடியும் பொழுதில் பனியில் நனைந்து
இயற்கையுடன் நீ விளையாடு!
பெற்றோர் மற்றோர் எவருடனும்
பூமியில் இன்முகத்தோடு உறவாடு!
பள்ளியில் பூத்த பூக்களுடன்
சிரிந்து மகிழ்ந்து விளையாடு
பக்கத்து இருக்கையின் தோழர் தோழியர் மீது
பாசம் கொண்டு விளையாடு
பள்ளியில் இருக்கும் காலம் முழுதும்
பண்பாடுடனே விளையாடு
படித்து வாழ்வினில் வெற்றி பெற்றிடும்
பாதையைக்கண்டு விளையாடு!
விளையாடு விளையாடு
நாளும் பொழுதும் விளையாடு
விளையாடு விளையாடு
விளையாட்டு வினையாமல் விளையாடு!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!