விளையாட்டாய்த் தமிழ் கற்க – தமிழ்டிக்ட்.காம்‌

விளையாட்டாய்த் தமிழ் கற்க வேண்டுமா?

குழந்தைகளுக்குத் தமிழில் ஆர்வம் உண்டாக்க வேண்டுமா?

தமிழ் மொழி, ஆங்கில மொழி ஆகியவற்றில் புலமை பெற வேண்டுமா?

ஜெர்மன் மொழியை அறிந்து புலமை பெறவேண்டுமா?

தமிழ்டிக்ட்.காம் (tamildict.com) என்கின்ற​ இத்தளம் உங்களுக்குப் பெரும் உதவி செய்யும்.

ஜெர்மன் மொழி கற்க நிறையக் காணொளிகள் உள்ளன.
அகராதிகள் மூன்று மொழியையும் ஒரு சேரக் கற்க பயன்படுகின்றன.

அந்தத் தளம் குறித்து இனி காண்போம்.

தமிழ்-ஆங்கிலம்-ஜெர்மன் அகராதிகள்

எழுத்துப் பிழை சரிபார்ப்புடன் தமிழ்- ஆங்கிலம்-ஜெர்மன் அகராதிகளுக்குச் சிறந்த தளம்.

உலகெங்கிலும் உள்ள பயனர்கள் மொழிபெயர்ப்புத் துறையில் தங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு தளத்தை உருவாக்கும் முயற்சி இது.

ஒவ்வொரு பார்வையாளரும் புதிய மொழிபெயர்ப்புகளைப் பரிந்துரைக்கலாம் மற்றும் பிற பயனர்களின் பரிந்துரைகளைச் சரி செய்யலாம் அல்லது உறுதிப்படுத்தலாம்.

திட்டத்தை ஆதரிக்கப் பல சாத்தியங்கள் இத்தளத்தில் உள்ளன.

ஆங்கிலம் முதல் தமிழ் மொழிபெயர்ப்பு அகராதி

ஆங்கிலம் முதல் தமிழ் மொழிபெயர்ப்புக்கு, மேலே உள்ள தேடல் பெட்டியில் நீங்கள் தமிழ் மொழியில் மொழிபெயர்க்க விரும்பும் ஆங்கில வார்த்தையை உள்ளிட்டு ‘தேடு’ என்பதற்கான பொத்தானை  கிளிக் செய்தால் போதும், தமிழில் உள்ள பொருள் வெளிப்படும்.

தமிழிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு அகராதி

தமிழிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்புக்கு, மேலே உள்ள தேடல் பெட்டியில் தமிழ்ச் சொற்களை உள்ளிட உங்களுக்குப் பல விருப்பங்கள் உள்ளன.

1. மேலே உள்ள பெட்டியில் உங்கள் தமிழ்ச் சொற்களை (யூனிகோடில்) வெட்டி ஒட்டவும் மற்றும் ‘தேடு’ என்பதற்கான பொத்தானை கிளிக் செய்யவும்.

2. ரோமானிய மொழிபெயர்ப்பை நீங்கள் அறிந்திருந்தால், மேலே உள்ள யூனிகோட் தமிழை ஆங்கிலத்திற்குப் பொத்தானைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யத் தொடங்கலாம்.

நீங்கள் ஆங்கில எழுத்துக்களை ஒலிப்பு ரீதியாக தட்டச்சு செய்து, இடம் விடுக் கட்டையை (space bar) அழுத்தும்போது, இவை தானாகவே தமிழ் எழுத்துக்களாக மாற்றப்படும்.

எ.கா., நீங்கள் ஆங்கிலத்தில் ’AMMA’ எனத் தட்டச்சு செய்து இடம் விடுக் கட்டையை அழுத்தினால், அது ’அம்மா’ ஆக மாற்றப்படும்.

ஜெர்மன்-தமிழ் அகராதி

ஜெர்மன் மொழியிலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பிற்கு, மேலே உள்ள தேடல் துறையில் நீங்கள் தமிழில் மொழிபெயர்க்க விரும்பும் ஜெர்மன் வார்த்தையை உள்ளிட்டு ‘தேடல்’ என்பதைக் கிளிக் செய்க.

தமிழ் – ஜெர்மன் மொழிபெயர்ப்பு

தமிழில் இருந்து ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்க, தேடல் துறையில் தமிழ் சொற்களை உள்ளிட உங்களுக்கு பல விருப்பங்கள் உள்ளன.

எண்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றும் வசதி

எண்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்ற, மேலே உள்ள தேடல் பெட்டியில் எண்ணை உள்ளிட்டு ‘தேடல்’ என்பதை கிளிக் செய்க.

கமாக்கள் போன்ற பிரிப்பான்களைப் பயன்படுத்த வேண்டாம்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் 655 என்ற எண்ணை உள்ளிட்டு தேடலை கிளிக் செய்தால்,  அது அறுநூற்றி ஐம்பத்தியைந்து என்று மொழிபெயர்க்கப்படும்.

இது 999999999 வரையிலான எண்களைத் தமிழில் மொழிபெயர்க்க உதவுகின்றது. இந்த அம்சம் தமிழ் எண்களை மிக விரைவாகக் கற்றுக்கொள்ள உதவுகிறது.

தமிழ் சொல் புதிர்

தமிழ் சொற்களைக் கற்றுக்கொள்ளப் புதிர்கள் உதவுகின்றன.

கற்றல் சொற்கள் பயன்பாட்டின் மூலம் கற்றுக்கொள்வது, தமிழ் சொற்களைக் கற்க எளிதான வழியாகும்.

குழந்தைகளுக்கான இந்தக் கற்றல் பயன்பாடு, தமிழ்ச் சொற்களைக் கற்க குழந்தைகளின் ஆர்வத்தை வளர்க்கிறது.

கற்றல் சொற்கள் புதிர் சொற்களை அடையாளம் காண, பட வடிவமைப்பில் குறிப்புகளை வழங்குகிறது.

குழந்தைகளுக்கான சொற்களை மூன்று முக்கிய வகைகளாக வகைப்படுத்துகிறோம், இது எளிதானது, நடுத்தர மற்றும் கடினமானது. மேலும் குழந்தைகள் தங்கள் ஆர்வத்தின் பின்வரும் துணை வகைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

பொதுவானக் குறிக்கோள்களுடன், குழந்தைகளுக்கான சொற்களைக் கற்றுக் கொடுப்ப‌தன் நோக்கம்:

வாசிப்புத் திறனை மேம்படுத்த

– அவர்களின் சரளத்தை மேம்படுத்த

– குழந்தைகளின் நம்பிக்கையை அதிகரிக்க

– அவர்களின் செறிவு சக்தியை அதிகரிக்க என்பதாகும்.

இந்த விளையாட்டு, தமிழ்ச் சொற்களின் தொகுப்பு மற்றும் குழந்தைகளின் சொற்களஞ்சியத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.

இது உங்கள் குழந்தைகளின் அறிவை வடிவமைப்பதற்கும், உங்கள் குழந்தைகளுடன் இந்தக் கற்றல் தமிழ்ச் சொல் புதிரை அனுபவிப்பதற்கும்  உதவும் சொல் விளையாட்டு ஆகும்.

தமிழ் ஒருங்குறி மாற்றி (இ-கலப்பை)

இது விண்டோஸ் 7 மற்றும் 10 இல் நீங்கள் நிறுவக்கூடிய ஒரு விசைப்பலகை (தளவமைப்பு) ஆகும். இந்த அமைப்பு தமிழ்த் தட்டச்சுக்கான கிளாசிக் பாமினி விசைப்பலகைத் தளவமைப்புக்கு நெருக்கமாக உள்ளது.

தமிழ் வார்த்தைகள், ஒரு பொருள் பலசொல், விடுகதைகள், தமிழ் ஹெங்மேன், நினைவாற்றல் விளையாட்டு, ஸ்ரீலங்கா சிட்டி எனும் பகுதிகளில் தமிழ் சார்பான பல விளையாட்டுகள் உள்ளன.

தமிழாலயம்

பதினோறு பகுதிகளில் தனித்துறை சார்பாகக் கணினிக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. விடை கடைசியாகக் காண்பிக்கப்படும்.

பிற எனும் பகுதியில் ஆங்கில இலக்கணம் அறிதல் மற்றும் ஆங்கிலக் கேள்வி பதில்கள் தேர்வாகவும் இருக்கின்றன. மிகப்பயனுள்ள பகுதியாகும் இவை.

விளையாட்டாய்த் தமிழ் கற்க www.tamildict.com ஐ சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com

 

 

One Reply to “விளையாட்டாய்த் தமிழ் கற்க – தமிழ்டிக்ட்.காம்‌”

Comments are closed.