விளையாட்டுப் பிள்ளைகள் – கவிதை

தெருவெங்கும் உறவாடும்

விளையாட்டுப் பிள்ளைகள்

நெடு நேரம் ஆனாலும்

சலிக்காது அலுக்காது…

மாட்டு வண்டி வைக்கப்போரு

கோழியடைக்கும் பஞ்சாரம்

எல்லாமே ஒளிவதற்கு ஏற்ற இடம்

தெருவிலிருக்கும் பிள்ளைகள் எல்லாம்

சேர்ந்து உண்ணும் நிலாச்சோறு…

வீட்டுக்குள்ளே டீவி வந்ததால

அது கொஞ்சம் குறைஞ்சிருச்சு

இப்ப அலைபேசி வந்து

இதையெல்லாம் அழிச்சிருச்சு …..

உள்ளத்தில் கொடூரம்

நெஞ்சத்தில் வஞ்சம்

உணர்விலே மிருகமெனெ

பிஞ்செல்லாம் நஞ்சாச்சு..

மனித குணம் மாறிப்போச்சு….

மாறவேணும் நிலைமை

அலைபேசி அருகாமை

தலைமுறைக்கு ஆபத்து

ஐந்து‌ வயது வரையாவது

அகற்றி வைப்பது சிறப்பு

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.