விளையாட்டுப் பிள்ளையார்

விளையாடப் பிள்ளையாரு வந்தாரு – அதை
விரிவாக சொல்லுறேன் கேட்டுப் பாரு

அழையாத விருந்தாளியா வந்தாரு –நம்ம
ஆட்டத்துல தன்னையும்தான் சேர்க்க சொன்னாரு

மாலைநேர சூரியனும் மயங்கும் போது – அந்த
மண்வெட்டி கபடியும் ஆட வந்தாரு

மழைபெய்யும் நேரத்தில் கூட வந்தாரு – ஓடும்
மழைநீரில் கப்பல்களை செஞ்சி விட்டாரு

மழையில்கூட பந்தப் போட்டு ஆடும்போது – தன்
காலால் பந்தத் தட்டி விட்டுப் போனாரு

நிலையாக கிரிக்கெட்டில் நிக்கும் போது – நீண்ட
தும்பிக்கையால் பந்து போட வந்து நிக்காரு

கலக்குகின்ற ஹாக்கியும் ஆடும் போது – தன்
கால்களாலே கோலு போடப் பார்க்குறாரு

சளைக்காது நமக்கு இணையாக நிக்குறாரு – கரும்புச்சாறு
கொண்டு வந்து தந்தா ஓடிப் போவாரு

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.