விழிச் சொரியும் வியர்வைத்துளி
ஒவ்வொன்றும் விலைமதிப்பற்றது
அளவிலா அன்பின் அதீத வெளிப்பாடு
இந்த கண்ணீர் துளி
இன்பமென்றால் புன்னகையோடு சேர்ந்து
பூத்துக்குலுங்கும் இந்த கண்ணீர் துளி
துன்பமென்றால் துக்கத்துடன் சேர்த்து
தூபமிடும் இந்த கண்ணீர் துளி
நீக்கமற நெஞ்சில் நிறைந்தவை நீங்கியதால்
ஏக்கத்தால் விழி சிந்தும் வியர்வை இந்த கண்ணீர் துளி
விழிபடும் வெளியில் சற்றும்
விலகாமல் கரப்பிடிக்குள் காத்து வைத்தவர்
எதிர்பாராமல் பிடி விலகி வான்படியேறும் கடிதுயர் சூழும்
நிலையில் மனம் பொங்கும் விழி வெள்ளம் கண்ணீர் துளி
மாறா அன்போடு கரம் பிடித்து கயல்விழி துடைக்கும்
மானிடர்களின் எண்ணிக்கை வையத்துள் வலுவிழந்துவிட்டனர்
உண்மையன்பு உள்ளத்தில் குடியிருந்தால் பிறர் துயர் கண்டு
அனிச்சையாய் கயல்விழி சிந்தும் உவர்நீர் கண்ணீர் துளி
விழியுள்ள ஜீவனுக்கு வலியென்பது இயற்கையின் நியதியே
வலியுள்ள ஜீவனின் விழி துடைக்கும் வழி உரைக்கும்
அருமருந்தாய் ஆற்றுப்படுத்த முயல்வோம்
மனிதம் காக்கும் பேராயுதமாய்!
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
6374836353