விழி பேசும் மொழி காதல்தானே
மெளனத்தின் ஆட்சி இங்கே நடக்கிறதே
சிரிப்பும் வெட்கமும் விழிகளில் வழிகிறதே
இனிமைகள் இங்கே குவிந்து கிடக்கிறதே
அடிப்பெண்ணே உலகம் சூழலை வேண்டாமே
பசியும் இரப்பைக்கு எடுத்திட வேண்டாமே
கழிவுகளும் உடலில் தோன்றிட வேண்டாமே
இப்படியே விழித்து பார்த்து மயங்கி
வாழ்க்கையை ரசித்து இருப்போமா?
இறப்பு வந்து நம்மை அழைத்தால்
இப்படியே சிரிப்புடன் சென்று மறைவோமா?
கருப்பையில் மீண்டும் இடம் கிடைத்தால்
பிறந்து வளர்ந்து மீண்டும் காதலிப்போமா?
கூ.மு.ஷேக் அப்துல் காதர்
கைபேசி: 9500421246
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!