விவசாயம் – கவிதை

மலர் பூத்து மணம் வீச மாலை நேரம் வந்ததும்

இவள் பார்க்க, அவன் பார்க்க இணையேற்பு தந்ததே

இருள் சூழ வெள்ளி பூக்க திங்கள் ஒளி மின்னுதே

ஏறு பூட்டி உழவு ஓட்டி விவசாயம் நடந்ததோ

காளையனின் வேளையிலே பயிர் ஒன்று ஆனதே

இது என்ன மாயமோ இவள் முகம் மிளிருதே

பயிர் முளைத்து வயிறு நிரம்பி நிறமாசம் ஆனதே

வலைபுட்டி அன்னம் ஊட்டி விழா என்றானதே

கொள்ளையிலே மாலையிலே கூட்டி எடுக்கையிலே

இன்பமாய் வலி ஒன்று வந்ததே..

அம்மா என்று அவள் இறங்க..

ஆனந்தமாய் கண்களின் ஓரம் கண்ணீர் கசிந்ததே

அக்கம் பக்கம் யாரும் இல்லை

ஆடவனும் ஊரில் இல்லை

கண்களை இறுக மூடிக்கொண்டு

கால் இரண்டையும் தான் திறந்து

பற்களையும் கடித்துக்கொண்டு சிறு புன்னகையும் தான் சிந்தி..

கங்கை நதி ஓட அவள் கால் வழியே பிண்டம் ஒன்று வந்ததம்மா

கொள்ளையிலே கிடந்த கருக்கு அருவாளால் அறுவடைதான் செய்து

பிண்டத்தைக் கையிலெடுத்து கூடாரத்தின் உள்ளேதான் வைத்து

மீண்டும் கொல்லத்தை கூட்ட தான் வந்தாள்….

அம்மா…….

மு.தனஞ்செழியன்
8778998348

7 Replies to “விவசாயம் – கவிதை”

  1. வ.சு.வசந்தா
    பயிரும் செழிக்கட்டும்.பண்டமும் பெருகட்டும்.மங்கலம் பொங்கட்டும்.மக்கள் செல்வம் தழைக்கட்டும்.

    வாழ்த்துக்கள் தோழர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: