கையிலே தூக்குவாளி
தலையிலே சோத்துக்கூடை
நைந்து கிழிந்த சேலை
நாணலாக ஆடி வரும் தண்டட்டி
பல்லாங்குழி பொக்கவாய் பாட்டி
பரிவுடனே வந்திடுவாள்!
வயலுக்குள்ளே …
நடையாய்..
வீட்டுக்குள்ளே சாமியாய்..
வளர்த்த என் மகராசா !
மாடுன்னு நினைக்காம
மகனா நினைச்சுக்கிட்டு
மனசார நாலு வைக்கோல்
தண்ணீரும் வைச்சுட்டு தானே போவாரு…
காஞ்சு போன நிலத்தை பாக்கும் போது…
அய்யோ பதறுதே…
என் மனசு!
கலங்குதே என் உசுரு!
என்ன பெத்த மகராசா
என்னென்ன தோனுமோ….?
மழையும் இல்லை!
பயிரும் இல்லை!
பாவிகளா…..
என்னத்த எடுக்க…
என் உயிரான வயலத்தான்
தோண்டுறீங்க….
கண்ணும் வலிக்குதே…
என் நெஞ்சும் துடிக்குதே..
கைகள் நடுக்குதே….
கடவுளே!
என் இறுதி நாளை இப்பொழுதே எழுதிவிடு!
கவிஞர். பழ.தமிழன் சின்னா
புதுக்கோட்டை
தான் உயிராகக் கருதும் தன் நிலம் பறிபோகையில் ஒரு கிழவியின் ஓலம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!